ETV Bharat / state

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

author img

By

Published : Jul 20, 2022, 11:26 AM IST

சென்னையில் கூவம் நதி ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற சென்ற அலுவலர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூவம் நதி ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
கூவம் நதி ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னை: மதுரவாயல் அடுத்த வானகரம் கூவம் நதிக்கரை ஓரம் உள்ள சிவ பூத பேடு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வீடுகளை அகற்ற அலுவலர்கள் சென்றுள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் வானகரம் அயப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடிக்கக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.