ETV Bharat / state

கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிப்பா? - பேரவையில் விவாதம்

author img

By

Published : Aug 25, 2021, 12:33 PM IST

Updated : Aug 25, 2021, 3:12 PM IST

கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிக்கப்படுவதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் உரிய பதிலை அளித்துள்ளார்.

கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிப்பா
கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிப்பா

சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று (ஆகஸ்ட் 25) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்திற்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை துறையின் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அர. சக்கரபாணி வெளியிடுகின்றனர். இந்த நிலையில், கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிக்கப்படுவதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. விவாதம் வருமாறு:

பென்னிகுவிக் இல்லம் இடிக்கப்படுவது தொடர்பாக கலைவாணர் அரங்கில் விவாதம்


செல்லூர் ராஜு

  • மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்கப்படுவதாகச் செய்தி வருகிறது, இதற்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • நாங்கள் எதிர்க்கட்சி எம்எம்ஏவாக இருக்கும்போது எத்தனை முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால் அதுபோன்று செய்யக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இருந்தாலும் தவறான செய்தி பதிவு செய்யக் கூடாது. பென்னிகுவிக் இல்லம் அது கிடையாது, அவர் 1911இல் மரணம் அடைந்துவிட்டார். ஆனால் அந்த இல்லம் 1912-15 காலகட்டத்தில் கட்டப்பட்டது, எதையும் ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

  • கலைஞர் நூலகம் அமைப்பதாக அவைக்கு வெளியிலும் விவாதிக்கப்பட்டது, ஆனால் பொதுப்பணித் துறை அமைச்சர் இது குறித்து விளக்கம் அளித்துவிட்டார். ஆதாரம் இருந்தால் தாருங்கள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்லூர் ராஜு

  • பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைப்பதாக வெளியில் செய்திகள் சொல்லப்படுகின்றன.

மு.க. ஸ்டாலின்

  • முன்னாள் அமைச்சர் (செல்லூர் ராஜு) உண்மைத்தன்மை இல்லாமல் பேசுவது உங்களின் பெருந்தன்மையைக் குறைக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற தவறான தகவல்களைக் கூற வேண்டாம், ஆதாரம் தாருங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: 'எதிர்க்கட்சிகளைப் பேசவிடுங்கள்' - அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின்

Last Updated :Aug 25, 2021, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.