ETV Bharat / state

நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டோரின் ஓவிய கண்காட்சி - ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்!

author img

By

Published : Apr 11, 2023, 9:54 PM IST

நடுக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட தூண்டும் திறன் ஓவிய கண்காட்சியை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நடுக்குவாத நோயால்  பாதிக்கப்பட்டோரின் ஓவிய கண்காட்சி
நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டோரின் ஓவிய கண்காட்சி

சென்னை: வயது மூப்பு காரணமாகவும் தலைமுறை வழியாகவும், பார்க்கின்சன்ஸ் என்று அழைக்கப்படும் நடுக்குவாதம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குளோபல் ஆர்ட் இந்தியா அமைப்பின் சார்பில் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொடர் பயிற்சியின் மூலம் அவர்களே தங்கள் கையால் வரைந்த ஓவிய கண்காட்சி, சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது.

தொடர் சிகிச்சை பெற்று வந்த பார்க்கின்சன்ஸ் (நடுக்க வாதம்) நோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு ஓவிய பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் தன்னம்பிக்கையுடன் வரைந்த ஓவியம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை பார்வையிட்டு துவக்கி வைத்த கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இது போன்று ஓவியங்கள் மற்ற நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஐபிஎல் மேட்ச்க்கு பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணி.. அமைச்சர் உதயநிதி கூறிய பதில் என்ன?

மேலும், இந்த நோய் தலைமுறை வழியாக 50 சதவீதமும் மற்றும் வயது மூப்பு காரணமாக 50 சதவீதமும் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், உரிய நேரத்தில் நோயினை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால் நோயில் இருந்து விடுபடலாம் எனவும், நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களின் குடும்ப அரவணைப்பே நோயில் இருந்து விடுபட காரணமாக அமைந்தது எனவும் மருத்துவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: சிவகங்கை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் கள்ளத்தனமாக மது விற்பனை - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.