ETV Bharat / state

சென்னை ஐஐடியின் எக்சிகியூட்டிவ் எம்பிஏ பாடத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 6:58 PM IST

IIT Madras EMBA: சென்னை ஐஐடி (IIT) மேலாண்மைக் கல்வித் துறையில் எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ (EMBA) பாடத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள், அக்டோபர் 19ம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை ஐஐடியின் எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை ஐஐடியின் எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை: கற்றல் ஆழமாக இருப்பின் அந்தக் கற்றல் மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். உலகளாவிய தலைமைத்துவம், கலாச்சார நுண்ணறிவு ஆகியவை தான் சர்வதேச ஆழ்ந்த கற்றல் (International Deep Learning) பாடத்திட்டத்தின் மையக் குறிக்கோளாகும். அந்த வகையில், சென்னை ஐஐடி (IIT) மேலாண்மைக் கல்வித் துறையில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கான எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ (EMBA) பாடத்திட்டத்தில், சர்வதேச ஆழ்ந்த கற்றல் என்ற பாடத்தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த முன் முயற்சியின் ஒரு பகுதியாக, எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டத்தின் 23 மற்றும் 24 வது பேட்ச் மாணவர்கள் பலர் இந்த 9 நாள் ஆழ்ந்த கற்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரிலும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ், லில்லே ஆகிய நகரங்களிலும் IESEG ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IESEG School of Management) என்ற கல்வி நிறுவனத்தில் இந்நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

உலகளாவிய கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும், ஐரோப்பா போன்ற சிக்கலான சமூக கலாச்சார அமைப்பைக் கொண்ட பிராந்தியத்தில் எவ்வாறு வணிகம் நடைபெறுகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் இந்த வகுப்பறை அமர்வு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. இதில் ஐரோப்பாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டு மையமாகத் திகழும் புகழ் வாய்ந்த டெகத்லானில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தைப் பற்றி மாணவர்கள் பார்வையிட்டனர்.

அதேபோன்று, பிரான்சின் போக்குவரத்து நெட்வொர்க் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் போர்ட்ஸ்-டி-லில்லே (பிரான்சின் மிகப்பெரிய உள்நாட்டு நதித் துறைமுகம்) பற்றிய ஒரு பார்வையும் அறிய முடிந்தது. மேலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் ஐரோப்பிய நிர்வாகத்தின் சிக்கலான இயக்கவியல் பற்றிய புரிதல்களும் இதன் மூலம் மாணவர்களுக்குத் தெரிய வந்தது.

மேலும், சமூக - கலாச்சார அனுபவத்தைப் பெறும் வகையில் சொய்ரி எனப்படும் பிரெஞ்சு குடும்பங்களில் நடைபெறக்கூடிய விருந்தும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இத்தகைய மேலாண்மைக் கல்வித் துறையில் சேர்வதற்கு அக்டோபர் 19ம் தேதி வரையில் விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலமாக https://doms.iitm.ac.in/emba/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்து சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறைத் தலைவர் தேன்மொழி கூறுகையில், “நவீன பாடத்திட்டம், செயல்திட்டம், டிஜிட்டல் முறையில் கவனம் செலுத்துதல், வலுவான குழுக் கற்றல் ஆகியவை தொழில் வல்லுநர்களை புதிய மாற்றத்தையும், நிறுவனங்களில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் தலைவர்களாக மேம்படுத்துகின்றன.

வணிகப் பிரச்சனைகளுக்கு கோட்பாடு கருத்துகளை பயன்படுத்தும் மூன்று ப்ராஜெக்ட்டுகள் (Projects) உள்பட கடுமையான, நடைமுறை சார்ந்த பாட நெறிமுறைகளை இந்த இரண்டாண்டு பாடத்திட்டம் உள்ளடக்கியதாகும். டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய உத்திகள், தொழில்துறையின் 4.0 தொழில்நுட்பங்கள் போன்ற தொழில்துறைக்கு தேவையான களங்களில் அதிநவீன அறிவை வழங்குவது எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டத்தின் தனித்துவ விற்பனைப் புள்ளியாகும்.

முக்கிய மேலாண்மைக் கருத்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், நிஜ உலகின் சவால்கள், வணிகக் களங்களுக்கான ஒருங்கிணைந்த சிந்தனைகள், உலகளாவிய முன்னோக்குகள், முடிவெடுத்தலில் பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உட்பொதித்தல் போன்ற பல்வேறு அம்சங்களில் எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ பாடத்திட்டம் கவனம் செலுத்துகிறது” என தெரிவித்தார்.

மேலும் இந்த எம்.பி.ஏ பாடத்திட்டத்தில், ஆழ்ந்த செயல்பாட்டு மற்றும் பரந்த தொழில்துறை களஅறிவு வரைமுறைக்கு உட்பட்டு வணிக முடிவு எடுக்க ஏதுவாக ஒருங்கிணைந்த முன்னோக்கு உலகளாவிய வணிக அமைப்பிற்கு பங்களிப்பை வழங்கும் வகையில் தலைமைத்துவப் பண்புகள் ஜனவரி 2024 முதல், மாற்றுவார இறுதி நாட்களில் நேரடி வகுப்புகள் நடைபெறும்.

மேலும் மாணவர், சேர்க்கைக்கு தகுதியாக ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்குமேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் அவசியம். அதைத் தொடர்ந்து, நுழைவுத் தேர்வு மற்றும் மேலாண்மைக் கல்வித் துறையால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எக்சிகியூட்டிவ் எம்.பி.ஏ (EMBA) பாடத்திட்டத்தின் கட்டமைப்பு:

  • செயல்பாட்டு அடித்தளம்- வணிகத்தில் முக்கிய செயல்பாடு மற்றும் துறை தொடர்பாக தத்துவ ரீதியான, கருத்தியல் ரீதியான, நுண்ணறிவுப் புரிதலை வழங்குகிறது.
  • ஒருங்கிணைந்த முன்னோக்கு - குறுக்கு செயல்பாட்டு சவால்கள், துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புகளில் நிலைப்பாடு முன்னோக்குகளை உருவாக்க உதவுகிறது.
  • உலகளாவிய தலைமைத்துவம் - உள்ளூர் மற்றும் உலகளாவிய வணிக சூழலில் வளர்ச்சி, லாபம், நிலைத்தன்மை போன்ற வழிகளை ஆராயக்கூடியது.

இவ்வாறு மேம்பட்ட மேலாண்மைக் கருத்துக்களின் பயன்பாடு குறித்த ஆழமான பார்வையை உருவாக்கும் வகையில் இந்த மூன்று கேப்ஸ்டோன் ப்ராஜெக்ட்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சர்வதேச ஆழ்ந்த கற்றல் திட்டம் (விருப்பப்பாடம்) உலகளாவிய கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதுடன், அறிவு மற்றும் முன்னோக்கு வரையறையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்துகிறது.

இதையும் படிங்க: Speaking For India : முதலமைச்சர் ஸ்டாலினின் "ஸ்பீக்கிங் பார் இந்தியா" ! இந்திய மொழிகளில் ஆடியோ வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.