ETV Bharat / state

ஓபிசி இட ஒதுக்கீடு - திமுகவின் முதல் கட்ட வெற்றி

author img

By

Published : Aug 1, 2021, 4:46 PM IST

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய தொகுப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு திமுக முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஓபிசி இட ஒதுக்கீடு - திமுகவின் முதல் கட்ட வெற்றி
ஓபிசி இட ஒதுக்கீடு - திமுகவின் முதல் கட்ட வெற்றி

சென்னை: தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று (ஆகஸ்ட் 1) சென்னை வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், "தன் வாழ்நாளில் தேர்தலில் தோல்வியையே பார்க்காத ஒரு தலைவர் கருணாநிதி. தான் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர். சட்டப்பேரவையில் அவர் உருவப்படம் திறக்கப்பட உள்ள நாள் தமிழ்நாடு பெருமை கொள்ளும் ஒரு நாளாகும்.

மக்களைத் தேடி மருத்துவம்

கரோனா காலகட்டத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்வதில் பொதுமக்களில் பலருக்குத் தயக்கம் இருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. இது முன்னுதாரணமாக இருக்க கூடிய திட்டம்.

கனிமொழி எம்பி பேட்டி

திமுகவின் வெற்றி

திமுக முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றிதான், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு. இது முழுமையான வெற்றியல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்து உள்ளார். முழுமையான வெற்றி கிடைக்கும் வரை திமுக போராட்டத்தை முன் எடுக்கும்.

நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. இதை ஒன்றிய அரசு ஏற்க தயாராக இல்லை " என்றும் கனிமொழி கூறினார்.

இதையும் படிங்க: கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.