ETV Bharat / state

2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் அனுமதி

author img

By

Published : Jan 8, 2022, 2:54 PM IST

Updated : Jan 8, 2022, 7:56 PM IST

Chennai Suburban Trains: இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புறநகர் ரயில்
புறநகர் ரயில்

Chennai Suburban Trains: தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஊரடங்கு நாளில் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க, இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் நிலைய கவுன்டரில் சான்றிதழ் காட்டினால் தான், டிக்கெட் பெற முடியும். ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின் போது, பயணியர் சான்றிதழ் காட்ட வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இன்றி, முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில், 50 விழுக்காடு பேர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வேயின், 'யுடிஎஸ்' செயலி வசதியில் பயணியர் மின்சார ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதிவரை, இக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நடிகர் சத்யராஜுக்கு கரோனா பாதிப்பு!

Last Updated : Jan 8, 2022, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.