ETV Bharat / state

"தர்ம ரட்சகராக அவதாரம் எடுக்கும் ஆளுநர்" - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

author img

By

Published : Jun 22, 2023, 4:57 PM IST

சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த வடலூர் வள்ளலாரை, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Minister Thangam Thennarasu Tweet
Minister Thangam Thennarasu Tweet

சென்னை: அண்மையில் வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்துள்ளேன். அதில் வள்ளலாரின் நூல்கள் பிரமிப்பை ஏற்படுத்தின. பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என வள்ளலார் கூறியது சனாதன தர்மத்தின் எதிரொலி.

இந்தியாவில் சிறுதெய்வம், பெருந்தெய்வம் வழிபாடு இருந்தபோது யாரும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள், தங்களது மதம் தான் பெரிது எனக் கூறியதால் தான் பிரச்னை வந்தது. ஆங்கிலேயர்கள் நமது அடையாளத்தை அழிக்க நினைத்தனர்.

அவர்களது நாட்டு மக்களைக் கொண்டு வந்து நமது நம்பிக்கைகளை மாற்ற முயன்றனர். ஜி.யு.போப், பிஷப் கால்டுவெல் போன்றவர்களும் அதன் ஒரு பகுதி தான். நமது நம்பிக்கைகளை அழிக்க வந்தவர்கள் தான் அவர்களும். தமிழ்நாடு தான் இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம்" என்று கூறினார்.

வள்ளலார் வைதீக மத நெறிகளை, சாதி, சமய வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்து, தனி சமய வழியை உருவாக்கியவர். அவரை இவ்வாறு 'சனாதனத்தின் உச்ச நட்சத்திரம்' என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது.

மேலும், ஆளுநரின் இந்த கூற்றிற்குப் பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என தமிழக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அப்பதிவில், "சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், 'தர்ம ரட்சகராக' புதிய அவதாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஈடுபட்டிருக்கிறார்.

  • சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம்…

    — Thangam Thenarasu (@TThenarasu) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரிகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை’’ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநரை தூக்கி எறியும் நாள் வெகு விரைவில் இல்லை - ஆ.ராசா ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.