ETV Bharat / state

'தகுதியின் அடிப்படையில் திறமையான விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' - அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Dec 30, 2022, 3:16 PM IST

தகுதியின் அடிப்படையில் தான் திறமையான விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; பரிந்துரையின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1895 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன் அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மூலமாக நியமிக்கப்பட்டனர். ஆனால், அதில் பல குளறுபடிகள் இருந்தன. அது மட்டும் இல்லாமல், பி.ஹெச்.டி பெற்றவர்கள், தகுதி ஆனவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது.

கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்னதன் அடிப்படையில், இணைச்செயலர், கல்லூரி கல்வி இயக்குநர் ஆகிய மூன்று பேர் கொண்ட அந்த குழு தான் அவர்களை நேர்முகத் தேர்வு வைத்து, அவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

நேர்முகத் தேர்வுக்கு வரக்கூடிய விரிவுரையாளர்களிடம் அந்த துறை சார்ந்த நீண்ட அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் கேள்விகளை கேட்பதற்கு நியமிக்கப்படுவார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ''குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இந்த நேர்முகத் தேர்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெறவுள்ளது. அதில் கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடம் நேர்முகத் தேர்வு நடக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படி 19 கௌரவ விரிவுரையாளர்கள் பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். தமிழ்நாட்டில் எட்டு வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் பணிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் வருகிற ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும்.

விண்ணப்பதாரர்களிடம் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் நேர்முகத்தேர்வின்போது, அவர்களின் திறனை அறிந்து தேர்வு செய்யப்படுவார்கள். தரத்தின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பி.ஹெச்டி படித்தவர்கள் மற்றும் நெட், ஸ்லேட் தேர்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மூன்றாவதாக ஸ்லெட், நெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரியான முறையில் தகுந்தவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 9,915 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் யார் எந்த பாடத்திட்டங்களில் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை நாளைக்கு அறிவிப்போம். இந்த தேர்வு முறையில் முழுக்க முழுக்க இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்'' என்றார்.

இதையும் படிங்க: 'இந்திய சட்ட ஆணையம் ஈபிஎஸ்-யை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது தவறானது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.