ETV Bharat / state

மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி வழங்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Dec 24, 2022, 11:08 PM IST

கரோனா வைரஸ் பரவும் நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை வழங்க வேண்டும் என அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.

மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி வழங்க கோரிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி வழங்க கோரிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி வழங்க கோரிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவிற்கு வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை ரோண்டம் அடிப்படையில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படுகிறது. மேலும் சென்னை விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப சோதனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது தென்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் விவரங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் முழுமையாக சேகரிக்கப்பட்டு, அவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- "கடந்த 2 வாரங்களாக ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் சுகாதார துறை செயலாளர் சுற்றிக்கை அனுப்பினார்.

கரோனா தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு பரிசோதனை செய்ய வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முழு மரபணு பரிசோதனை கூடம் தமிழகத்தில் இருப்பதால் ஒமிக்கிரான் கண்காணிப்பு இருந்து வருகிறது. உருமாற்றம் 10க்கும் மேலாக உள்ளது. தமிழ்நாட்டில் தினமும் 10க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

தமிழ்நாட்டில் XBB வகை கொரோனா தான் உறுதியாகி வருகிறது. உலகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் BA5 கொரோனாவின் உள் வகையான பாதிப்பும் BF7 வகை கொரோனா தான் சீனாவில் பாதிப்புகள் அதிமகாக காரணமாக உள்ளது. முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு, படுக்கை வசதி, மருந்து கையிருப்பு, ஆக்சிஜன் வசதி ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் ஒன்னேக்கால் லட்சம் படுக்கை வசதி உள்ளது. 72 ஆயிரம் படுக்கைகளை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை படுக்கை தயாராக உள்ளது. 3 மாத மருந்து கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஜெனரேட்டர் போதுமான அளவிற்கு உள்ளது. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின் படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் 2% பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 பன்னாட்டு முனையங்களில் ரேண்டாம் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை பன்னாட்டு முனையத்தில் கோலாலம்பூர், துபாய், கொழும்பு, தோகா, டக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 2 சதவீத அடிப்படையில் 37 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

சென்னை விமான நிலையத்தில் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் தட்பவெப்ப நிலை கண்காணிக்கப்படுகிறது. இதில் அதிக தட்பவெப்பம் இருந்தால் தனிமைப்படுத்தி ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் 72 ஆயிரம் படுக்கைகள் கரோனாவுக்காக தயார் நிலையில் உள்ளன.

புனே, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பும் நிலை மாறி சென்னையில் அந்த வசதி உள்ளது. தற்போது 3 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. மேலும் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. பூஸ்டர் யாரும் போடுவதில்லை. மூக்கு வழியாக போடும் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு தான், அரசு மருத்துவமனைகளுக்கு இல்லை. தடுப்பூசி தந்தால் போடும் பணியை தொடங்கப்படும். மூக்கு வழியாக போடும் தடுப்பூசியை தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம்.

தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக நடத்தி முதல் கட்டம் 96 சதவீதமும் 2ம் கட்டம் 92 சதவீதமும் போடப்பட்டு உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி 60 சதவீதம் போடப்பட்டு உள்ளது. ஒம்மிக்கிரானில் 10 வகையான பாதிப்புகள் உள்ளன" என கூறினார்.

இதையும் படிங்க: நம்ம ஸ்கூல் திட்டம்: இபிஎஸ்சின் கேள்விகளுக்கு அன்பில் மகேஷ் விளக்கத்துடன் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.