ETV Bharat / state

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் கே.என். நேரு

author img

By

Published : Jan 27, 2022, 8:05 AM IST

Updated : Jan 27, 2022, 9:40 AM IST

சென்னையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என். நேரு
சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என். நேரு

சென்னை: சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பஜார் ரோடு, திவான் பாஷ்ய தோட்டம், சுப்பிரமணிய சாலை, திருவள்ளூர் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் நேற்று (ஜனவரி 26 ) ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மெட்ரோ அலுவலர்களிடம் தண்ணீர் தேங்குவதன் காரணங்கள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தார்.

நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள்
நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என். நேரு கூறியதாவது,"சுரங்கப் பாதைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் நீர் தேங்கியுள்ளது. அதனை இன்று இரவுக்குள் உடனடியாக சரி செய்யும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள்
நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள்

முதலமைச்சர் ஒரு கமிட்டியை அமைத்து உள்ளார். மழை காலங்களில் நீர் தேங்காதவாறு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மழைக் காலங்களிலும் நீர் தேங்காதவாறு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும், 152 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டு வேலைகளை ஆரம்பித்து விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

  • பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை, திவான் பாஷியம் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய குடிநீர், மழைநீர் வடிகால்,கழிவுநீர் இணைப்புப்பணிகள் குறித்து இன்று நேரில் ஆய்வுசெய்தேன். அப்போது மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார். pic.twitter.com/D4uDkGEXgG

    — K.N.NEHRU (@KN_NEHRU) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மெட்ரோ வாட்டர் மேலாண்மை இயக்குநர் விஜய ராஜ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: விளையாட்டு வளாகத்திற்கு திப்பு சுல்தானின் பெயர்...! வாளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

Last Updated : Jan 27, 2022, 9:40 AM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.