ETV Bharat / state

போதையற்ற சமுதாயத்தை மாணவர்கள் உறுதிசெய்ய வேண்டும்... அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By

Published : Aug 26, 2022, 9:43 PM IST

சென்னையில் லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பாெய்யாமாெழி, போதையற்ற சமுதாயத்தை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Etv Bharat அன்பில் மகேஸ் பாெய்யாமாெழி பேச்சு
Etv Bharat அன்பில் மகேஸ் பாெய்யாமாெழி பேச்சு

சென்னை: நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவையின் செயல்பாட்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், பேசிய அவர், “லயோலா கல்லூரி என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி. அவரின் நண்பனாக இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

இது எனக்கு பரிச்சயமான கல்லூரி தான். படிப்பைக் காட்டிலும் சமுதாயத்தில் அக்கறை காட்டுவது லயோலா கல்லூரி. நாட்டு மக்களுக்கு ஓர் பிரச்னை என்றால் முதலில் குரல் எழுப்புவது லயோலா கல்லூரி தான். நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான், போதையற்ற சமுதாயத்தை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது.

போதையற்ற சமுதாயத்தை மாணவர்கள் உறுதிசெய்ய வேண்டும்... அமைச்சர் அன்பில் மகேஷ்

உலகிலேயே இளைஞர் சக்தி அதிகம் உள்ள நாடு, இந்தியா. நாட்டை நல்வழிப்படுத்தும் பொறுப்பு, இன்றைய மாணவர்களுக்கு உண்டு. சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள 45 கோடி இளைஞர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். நாட்டுப்பற்றில், மொழிப்பற்றில் அனைவரும் ஒன்றுகூட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.