ETV Bharat / state

ஆன்லைன் ரம்மியால் யாரேனும் இறந்தால் ஆளுநர் தான் பொறுப்பு - ஜி.ராமகிருஷ்ணன்

author img

By

Published : Dec 1, 2022, 4:39 PM IST

ஆன்லைன் ரம்மியால் யாராவது தற்கொலை செய்தால் ஆளுநர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் யாராவது தற்கொலை செய்தால் ஆளுநர் தான் பொறுப்பு
ஆன்லைன் ரம்மியால் யாராவது தற்கொலை செய்தால் ஆளுநர் தான் பொறுப்பு

சென்னை: பழவந்தாங்கல் பி.வி. நகரில், கண்டோமெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள மயான இடத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோருக்கு 1,000 கடிதம் அனுப்பும் இயக்கத்தை, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: "பழவந்தாங்கல் பி.வி.நகரில் ராணுவ கண்டோன்மெண்ட் நிர்வாகத்திற்கு சொந்தமான மயானத்தில், 40 ஆண்டுகளாக எந்த வசதிகள் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த இடத்தை மாநில அரசுக்கும் மாநகராட்சிக்கும் ஒப்படைத்தால் மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தொகுதி எம்பி டி.ஆர்.பாலு ஆகியோருக்கு கடிதம் எழுதும் போராட்டம் நடக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி வைக்க பிரதமர் வந்தார். அது முடிந்து பல நாட்கள் ஆகிறது. ஆனல் தற்போது பாஜக தவறான தகவலை வைத்து அரசியல் செய்கிறது. பிரதமர் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும். அதேபோல் இங்கும் நல்ல பாதுகாப்பு இருந்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.

பாதுகாப்பு குறை என்பது சரியான கருத்து அல்ல. மாநில அரசை குறை சொல்ல வேண்டும், குடைச்சல் தர வேண்டும் என்பதற்காக பாஜக தலைவர் தவறான பிரச்சனையை எழுப்புகிறார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுப்பட்டு பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து உள்ளனர். சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை என்பதால் தான், மாநில அரசு ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வு செய்து அறிக்கையில் மசோதா அனுப்பியது. ஆனால் ஒப்புதல் தந்து ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு பதிலாக, 6 மாதங்களாக கிடப்பில் போட்டதால் காலாவதியாகி மறுபடியும் ஆன்லைன் சூதாட்டம் ஆரம்பித்து உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவ்டிக்கை எடுப்போம் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சொல்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவில் கையெழுத்து போடாமல் வைத்து விட்டார். ஆளுநர் செய்தது சரியானதல்ல. ஆளுநர் மத்திய பாஜக பிரதிநிதி போல் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் யாரேனும் தற்கொலை செய்தால் ஆளுநர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: ‘ஆளுநர் இல்லாவிட்டால் சிக்கல்கள் இருக்காது’ - கனிமொழி எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.