ETV Bharat / state

மூதாட்டி கொலை - கொலையாளி கைது

author img

By

Published : Jul 29, 2021, 1:30 PM IST

சென்னை காசிமேட்டில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து அவர் அணிந்திருந்த ஆறு சவரன் தங்க நகைகளை பறித்து சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொலையாளி கைது
கொலையாளி கைது

சென்னை: காசிமேடு காசிமா நகர் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் மீனவர் மைக்கேல் நாயகம். இவருடைய மனைவி அந்தோணி மேரி (60). மைக்கேல் நாயகம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் வீட்டில் இருந்த அந்தோணி மேரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்தோணி மேரியின் மகள் சுபா கொடுத்த புகாரின்பேரில் காசிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்த அந்தோணி மேரி கொலை செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு நன்கு தெரிந்தவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்தோணி மேரியின் தோழியின் மகனும், மைக்கேல் நாயகத்துடன் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் காசிதோட்டம் ஒன்றாவது தெருவை சேர்ந்த சகாயம் அலெக்ஸ் (42) என்பவரை சந்தேகத்தின்பேரில் தனிப்படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டர்.

விசாரணையில் அந்தோணி மேரியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதாவது, சகாயம் அலெக்ஸ்க்கும் அவருடைய மனைவிக்கும் பணத்தேவைக்காக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பணத்தேவைக்காக திருடலாம் என சகாயம் அலெக்ஸ் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, மைக்கல் நாயகம் வீட்டில் இல்லாதபோது அவருடைய வீட்டிற்கு சென்று அங்கிருந்த அந்தோணி மேரியை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த நகையை திருடிவிட்டு சந்தேகம் வராமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளார்.

தொடர்ந்து ராயபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் திருடிய நகையை ரூ.1,30,000-க்கு அடகு வைத்துள்ளார். அதில் ரூ.40 ஆயிரத்தை மனைவிக்கு அனுப்பி வைத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கையில் வைத்துள்ளார். இதனிடையே காவல் துறையினர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

உடனடியாக அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வேறு ஏதேனும் இடத்தில் திருட்டில் ஈடுபட்டுள்ளாரா? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டி கொலை - 6 சவரன் நகை கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.