ETV Bharat / state

சட்டப்பேரவைத் தேர்தல் 2ஆம் கட்ட பரப்புரையைத் தொடங்கும் கமல்ஹாசன்

author img

By

Published : Dec 19, 2020, 10:50 AM IST

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Circular on Kamal Haasan  Election Campaign
Circular on Kamal Haasan Election Campaign

வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டிவருகின்றன. அதன் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பரப்புரையை தென்மாவட்டங்களில் தொடங்கியுள்ளார்.

மநீம கட்சி அறிக்கை

இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் மண்டலங்களில் நிகழ்த்த உள்ளார்.

கமல்ஹாசன் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ளும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் கட்டமைப்பு மாவட்டச் செயலாளர் அப்பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பொறுப்பேற்று செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

அனைவரும் கரோனா விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதையும் படிங்க... 'திருட்டில் செழிப்போ செழிப்பு; அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி' - நம்மவர் நக்கலின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.