ETV Bharat / state

ஆகம விதிப்படி அர்ச்சகர் நியமனம்... இந்து சமய அறநிலைய துறை பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Aug 9, 2021, 2:06 PM IST

Updated : Aug 10, 2021, 6:06 AM IST

தமிழ்நாடு கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அர்ச்சகர்
அர்ச்சகர்

தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் அச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலைத்துறை முன்னதாக விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் சார்பாக முன்னதாக வழக்கு தொடரப்பட்டது.

ஆகம விதிப்படி அர்ச்சகர் நியமனம் தொடர்பாக பேசும் வழக்கறிஞர் வள்ளியப்பன் தொடர்பான காணொலி

அந்த மனுவில், ஆகம விதிகளைப் பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகமவிதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

அர்ச்சகர்
அர்ச்சகர்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: தமிழர் மீது ரூ.2.63 லட்சம் கடன்

Last Updated :Aug 10, 2021, 6:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.