ETV Bharat / state

அரசு வேலைக்காக போலி சாதிச் சான்றிதழ்..  தண்டிக்காமல் விடக்கூடாது..  உயர் நீதிமன்றம்..

author img

By

Published : Mar 13, 2023, 9:41 PM IST

அரசு வேலைக்காக போலி சாதிச் சான்றிதழ் அளித்து இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டியவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது - உயர் நீதிமன்றம்!
இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டியவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது - உயர் நீதிமன்றம்!

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்றிதழ் அளித்து 1982ஆம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணிக்கு சேர்ந்துள்ளார். பின்னர் 1999ஆம் ஆண்டு அவருக்கு இளநிலை எழுத்தராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது சாதிச் சான்றிதழ், மாநில அளவிலான ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அப்போது அவரது சகோதரரும், சகோதரியும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்த மாநில அளவிலான குழு, அவரது பழங்குடியினர் சாதிச் சான்றிதழை கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதன் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவரது ஓய்வு கால பண பலன்களும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 40 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தனது சாதிச் சான்றிதழை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்வது சட்டப்பூர்வமானது அல்ல எனக் கூறி, பாலசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, “பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் இட ஒதுக்கீட்டு கொள்கை பெருமைக்குரிய ஒன்று. அரசு வேலைக்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை துஷ்பிரயோகம் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் விடக் கூடாது. எனவே பாலசுந்தரத்தின் சாதிச் சான்றிதழ் ரத்து செய்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேலும் பாலசுந்தரம் தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம் போலி சாதிச் சான்றிதழைக் கண்டறிய தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இட ஒதுக்கீட்டுக் கொள்கையை துஷ்பிரயோகம் செய்ததை நியாயப்படுத்த முடியாது” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குறவன் - குறத்தி ஆட்டத்துக்கு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.