ETV Bharat / state

லியோ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 11:55 AM IST

Leo movie: லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: உலகெங்கிலும் நாளை (அக்.19) வெளியாக உள்ள நடிகர் விஜய்யின் லியோ படத்தை சட்டவிரோதமாக ஆயிரத்து 246 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென, அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன் ஸ்டியோ நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, தமிழ்நாட்டில் 850 திரையரங்குகள் உள்ளிட்ட நாடு முழுவதும் ஆயிரத்து 500 திரையரங்குகளுக்கு மேல் திரைப்படம் வெளியாக உள்ளதாகவும், பிரபல நட்சத்திரங்களான அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரின் நடிப்பில், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன் மூலம் திரைக் கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து, லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: LCU-வில் லியோ இணைவது உறுதி? - உதயநிதி ஸ்டாலினின் சூசகமான ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.