ETV Bharat / state

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு இருந்தால்; பாஜக விட பத்து மடங்கு வெற்றி பெற்று இருக்கும் - கே.எஸ். அழகிரி

author img

By

Published : Feb 23, 2022, 2:28 PM IST

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு இருந்தால்; பாஜக விட பத்து மடங்கு வெற்றி பெற்று இருக்கும் - கே.எஸ். அழகிரி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

KS ALAGIRI ASK Can BJP will contest parliamentary elections alone
KS ALAGIRI ASK Can BJP will contest parliamentary elections alone

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், ஈ.வெ.கி. சம்பத்தின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சிலர் கே.எஸ் அழகிரி சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பாஜக விட பத்து மடங்கு வெற்றி

அப்போது பேசிய அவர், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியும் பல இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஸ்டாலினின் 9 மாத ஆட்சிக் காலத்திற்கான ஒரு அன்பு நற்சான்றிதழ் தான் இந்த வெற்றி. இதற்காக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவோம் என்று சொல்ல முடியுமா?
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவோம் என்று சொல்ல முடியுமா?

பாஜக மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் எங்களது வெற்றி சதவீதம் 72 ஆக உள்ளது. ஆனால், அவர்கள் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான தோல்வியைப் பெற்ற கட்சி தான் பாஜக. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டி போட்டு இருந்தால் தற்போது பாஜக வெற்றி பெற்றதை விட பத்து மடங்கு வெற்றி பெற்று இருக்கும்.

எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்

பாஜக இந்த வெற்றிக்கு எவ்வளவு செலவு செய்தது என்று தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் இந்த தேர்தலில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை, இது ஒரு புரட்சி. இந்த தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்களைத் தேடி அலைந்தார்கள் வாக்காளர்களைத் தேடி அலையவில்லை. பாஜக வெற்றி என்று சொல்வது பலூனில் காற்று ஊதுவது போன்றது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.

ஈவெகி சம்பத் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்
ஈவெகி சம்பத் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்

அதிமுகவின் நீங்கள் பி டீம் இருக்கிறீர்கள், எங்கள் கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் இருந்தது நாடாளுமன்றத்தில் இருந்தது. தற்போது உள்ள ஆட்சியிலும் எங்கள் கூட்டணி சேர்ந்தது. ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி.

மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கம் தான் பாஜக. எங்களது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி, கூட்டணிக்கான காரணத்தை நான் தெரிவித்துவிட்டேன்.

சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை
சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை

ஆனால், பாஜக கூட்டணி விட்டுத் தனித்துப் போட்டியிட்டு உள்ளது. அதற்கான காரணம் இன்னும் தெரிவிக்கவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவோம் என்று சொல்ல முடியுமா? மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி பாஜக. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக இதைவிட மோசமான நிலைக்குத் தள்ளப்படும், சரிவைச் சந்தித்து வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேசிய உயர் கல்வித் தகுதிகள் கட்டமைப்பு நீட் தேர்வை விட கொடுமையானது - பொன்முடி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.