ETV Bharat / state

அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் யுத்தம் -கே.எஸ்.அழகிரி

author img

By

Published : Sep 28, 2019, 11:16 PM IST

சென்னை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் யுத்தம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ks allagiri

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாங்குநேரி தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்வீரராக இருக்கும் ரூபி மனோகரனை வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினிடம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து பிற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற உள்ளோம் என்றார்.

நாங்குநேரி தேர்தல் குறித்து பேசிய அழகிரி

தொடர்ந்து பேசிய அவர், இந்தத் தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் யுத்தமாகும். இறையாண்மை மிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் நிராகரித்து அதனை தவிர்க்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் கட்சியின் கொள்கையாக இருக்கிறது. அதிகாரத்தை வைத்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கிறார்கள். அதேபோன்று அதிமுக ஆட்சி செயலற்று சூம்பி கிடக்கிறது. எனவே இரண்டு கட்சியின் இயலாமையை எடுத்துரைத்து இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்றார்.

இதை படிங்க : கலெக்சன், கரக்சன், கரப்சன் பற்றிதான் தேர்தல் பரப்புரையே -ஸ்டாலின்

Intro:


Body:காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்குநேரி தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்வீரராக இருக்கும் ரூபி மனோகரனை வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். அவரது வெற்றியை உறுதி செய்யும்விதமாக மதசார்பற்ற கூட்டணியின் தமிழக தலைவராக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றோம். மேலும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து பிற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற உள்ளோம்.

இந்த தேர்தல் என்பது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் யூத்தம் ஆகும். அதிகாரத்தை வைத்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கிறார்கள். அதே போல் அதிமுக ஆட்சி செயலற்று சூம்பி கிடக்கிறது. எனவே இரண்டு கட்சியின் இயலாமையை எடுத்துரைத்து வாக்குகள் பெறுவோம். இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.