ETV Bharat / state

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புடைய சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 6:48 AM IST

Shark Fin Smuggling: சென்னையில் இருந்து இலங்கை வழியாக, சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற, ரூ.10 லட்சம் மதிப்புடைய 20 கிலோ, மருத்துவ குணமுடைய சுறா மீன்களின் துடுப்பு, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

Karur passenger arrested for trying to smuggle shark fins from Chennai to Singapore via Sri Lanka
சுறா மீன் துடுப்புகளை கடத்த முயன்றவர் கைது

சென்னை: சென்னையில் இருந்து இலங்கை வழியாக, சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்திச் செல்ல முயன்ற சுறா மீன்களின் துடுப்புகளைச் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கரூரைச் சேர்ந்த பயணியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் இருந்து இலங்கை செல்ல இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் (நவ.09) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை, பாதுகாப்பு சோதனை பகுதியில், மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் பரிசோதித்தனர்.

அப்போது இந்த விமானத்தில், இலங்கை வழியாகச் சிங்கப்பூருக்குச் சுற்றுலாப் பயணிகள் விசாவில் பயணம் செய்ய வந்திருந்த, கரூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது (58) என்ற பயணி மீது, பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய உடைமைகளை முழுமையாகப் பரிசோதித்தனர். அவர் வைத்திருந்த பை உள்ளே 20 கிலோ, மருத்துவ குணம் உடைய, சுறா மீன்களின் துடுப்புகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து சாகுல் ஹமீதையும், அவர் வைத்திருந்த சுறா மீன் துடுப்புகளையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சாகுல் ஹமீதுவின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவர் வைத்திருந்த 20 கிலோ சுறா மீன் துடுப்புகளையும் பறிமுதல் செய்தனர். அந்த சுறா மீன் துடுப்புகளின் சர்வதேச மதிப்பு ரூ.10 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குணம் உடைய இந்த சுறா மீன்களின் துடுப்புகளை, வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி உரிய ஆவணங்கள் இல்லாமல், மறைத்து வைத்து எடுத்துச் சென்ற சாகுல் ஹமீதை சுங்கத்துறை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: மகளிர் உரிமை தொகைத் திட்டத்தை நிறுத்த திட்டமா? - அமைச்சர் முத்துசாமி அளித்த விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.