ETV Bharat / state

ஒன்னுமில்லாத கட்சியை எந்த ஆலோசகர் வந்தும் வெற்றி பெற வைக்க முடியாது: கார்த்தி சிதம்பரம்

author img

By

Published : Feb 12, 2020, 10:28 AM IST

சென்னை: தேர்தலில் வெற்றிபெற ஒரு தலைமை, அரசியல் கொள்கை இருக்கணும். மாறாக ஒன்னுமில்லாத கட்சியை எந்த ஆலோசகர் வந்தும் வெற்றிப் பெற வைக்க முடியாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை,விமான நிலையத்தில்,கார்த்திக் சிதம்பரம் பேட்டி Karthi Chidambaram comments on 'Delhi elections' Karthi Chidambaram, 'Delhi elections', Delhi elections 2020 'தேசிய தலைவர்களை நம்பி வெற்றி பெற முடியாது:' டெல்லி தேர்தல் குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து கார்த்தி சிதம்பரம், டெல்லி தேர்தல் 2020, சென்னை விமான நிலையம்
Karthi Chidambaram comments on 'Delhi elections'

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் ஒருவிதமாக வாக்களிப்பவர்கள், நாடாளுமன்ற தேர்தலில் வேறுவிதமாக வாக்களிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றோம் என்பதற்காக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற முடியாது.

குறிப்பாக, மாநிலங்களில் பலமான தலைவர்கள் இருக்கும்போது, வெறும் தேசியத் தலைவர்களின் முகத்தை வைத்து, அவர்களின் செல்வாக்கை வைத்து தேர்தலில் வெற்றிப்பெற முடியாது.

இந்த உண்மையை டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்றுதான் மற்ற மாநிலங்களிலும் வருங்காலங்களில் இருக்கும்.

அந்தந்த மாநில தலைமைகளை நம்பித்தான் ஒருகட்சியின் வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்யப்படும்.

தேசிய அளவிலான விஷயங்களை மட்டும் வைத்து, தேசிய தலைவர்களை மட்டும் முன்னிறுத்தி வெற்றிப் பெற்றுவிட முடியாது.

ஒன்னுமில்லாத கட்சியை எந்த ஆலோசகர் வந்தும் வெற்றி பெற வைக்க முடியாது: கார்த்தி சிதம்பரம்

அதைத்தான் இந்த தேர்தல் உறுதிப்படுத்துகிறது. மீண்டும் ஆம் ஆத்மி அமோக வெற்றிப்பெற்றது பாராட்டுதலுக்குரியது.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி : மாநிலத் தலைமை பெரிய நிறுவனங்களைக் கொண்டு, அவர்கள் மூலம் தேர்தலில் வெற்றிப் பெற முடியுமா?

பதில் : இதெல்லாம் யுக்திதான். வருங்காலத்தில் சமூக வளைதளம் மற்றும் தொழில்நுட்பம் அதிகரிப்பால், அதன் தரவுகளை ஆராய ஒரு குழு வைத்துள்ளார்கள். அந்தக் குழுவினால் வெற்றிப் பெற்றார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு தலைமை இருக்கணும், அரசியல் இருக்கணும், அரசியல் கொள்கை இருக்கணும், அதற்கு பின்னர் அந்தக் குழு இருந்தால் கொஞ்சம் வலிமையாக இருக்கும். ஒன்னுமில்லாத கட்சியை எந்த ஆலோசகர் வந்தும் வெற்றிப்பெற வைக்க முடியாது.

கேள்வி: தொடர் சட்டமன்ற தோல்விகள், பாஜகவின் நிலைப்பாட்டில் எதுவும் மாற்றத்தை கொண்டுவருமா?

பதில் : பாஜக மாநிலத் தலைமைகளை முன்னிறுத்தாமல், மத்தியத் தலைமைகளை மட்டும் சட்டமன்ற தேர்தலில் முன்னிறுத்தினால் இதே நிலைமைதான் வரும். டெல்லியில் ஒரு முதலமைச்சர் வேட்பாளரைக் கூட அறிவிக்கவில்லை.

சிறப்பாக ஐந்தாண்டு காலம் செயல்பட்ட ஒரு முதலமைச்சரை எதிர்த்து ஒரு தலைமையை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தால் இந்த நிலைமைதான் வரும்.

கேள்வி : காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது குறித்து?

பதில்: நம்ம ஊரில் அடிக்கடி திட்டம் அறிவித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் திட்டம் மக்கள் மத்தியில் போய் சேருகிறதா என்று பார்க்க வேண்டும். காவிரி- குண்டாறு திட்டம் என்ன ஆனது?

நான் கூட இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால் இன்று வரை திட்டத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்தத் திட்டம் வரைபடத்தில் மட்டுமே இருக்கிறது. அதனால் மாவட்டத்துக்கு ஒரு மாதிரி திட்டத்துக்கு பெயர் வைத்தால் மட்டும் செயல்பாட்டுக்கு வருமா? என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார்.

யார் அந்த ஏழுவர்- கார்த்தி சிதம்பரம்

யார் அந்த எழுவர்?

முன்னதாக செய்தியாளர்கள் கார்த்தி சிதம்பரத்திடம் எழுவர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது யார் அந்த எழுவர் என்று தன் அருகில் நின்ற ஆதரவாளர்களிடம் கேட்டறிந்தார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

Intro:சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

அந்தந்த மாநில தலைமைகளை நம்பி தான் கட்சியின் வெற்றி தோல்விகள் நிர்ணயம் செய்யப்படும்.தேசிய அளவிலான விஷயங்களை மட்டும் வைத்து தேசிய தலைவர்களை முன்னிறுத்தி மட்டும் ஒரு மாநில தேர்தலில் வெற்றி பெற முடியாது.
அதைத்தான் இந்த தேர்தல் உறுதிப்படுத்தி இருக்கிறது.

மீண்டும் ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் அமோக வெற்றி பெற்றுள்ளது பாராட்டக்கூடிய விஷயம் ஆகும்.

ஒரு தலைமை இருக்கணும் அரசியல் இருக்கணும்,அரசியல் கொள்கை இருக்க வேண்டும் அதற்கு பின் அந்த அணி இருந்தால் வலிமையாக இருக்கும் .அதை விட்டுவிட்டு ஒன்றும் இல்லாத கட்சியை எந்த ஒரு ஆலோசகர் மூலம் வெற்றிபெற வைக்க முடியாது.

பாஜக அவர்களுடைய மாநில தலைமையை முனிருத்தாமல் மத்திய தலைமையை மட்டும் முன்னிறுத்தி சட்ட மன்ற தேர்தலை சந்தித்து கொண்டு இருந்தால் இதே நிலைமை தான் அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.

டெல்லியில் ஒரு முதல்வர் வேட்பாளரை கூட அவர்கள் அறிவிக்கவில்லை.சிறப்பாக ஐந்து ஆண்டுகாலம் செயல்பட்ட முதல்வரை எதிர்த்து ஒரு தலைமையை அறிவிக்காமல் இந்த தேர்தலை சந்தித்தால் இவ்வாறு தான் நடக்கும்.

நம் ஊரில் திட்டங்கள் பல அறிவித்து கொண்டுதான் இருப்பார்கள் ஆனால் நடைமுறையில் என்ன செய்கிறார்கள் என்பதை தான் பார்க்க வேண்டும்.

வெறும் ஒரு மாவட்டத்தை அறிவித்து ஒரு திட்டத்துக்கு பெயர் வைப்பதால் மட்டும் எந்த ஒரு பயனும் இல்லை.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.