ETV Bharat / state

செவிலியர் போராட்டம் - கமல் ஆதரவு

author img

By

Published : Sep 28, 2021, 4:54 PM IST

Updated : Sep 28, 2021, 5:10 PM IST

பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியரை நேரில் சந்தித்து, கமல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

nurse protest  protest  chennai nurse protest  covid work nurse protest  chennai news  kamal haasan  kamal haasan support nurse  செவிலியர்கள் போராட்டம்  கரோனா கால செவிலியர்கள் போராட்டம்  தற்காலிக செவிலியர்கள் போராட்டம்  செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்த கமல்  கமல்ஹாசன்  மக்கள் நீதி மய்யம்
கமல்

சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், “செவிலியரின் நியாயமான போராட்டத்தில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம்.

கரோனா காலத்தில் செவிலியர் சேவையின் பலனாக பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இவர்களின் பணி நமக்குத் தேவை.

கமல் ஆதரவு

சேவை நமக்கு தேவை

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக அரசு கருத வேண்டாம். இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதலால் செவிலியர் பணி முடிந்து விட்டதுபோல் சிதறடிப்பது நியாயமில்லை. இவர்களின் கோரிக்கை நியாயமானது.

இவர்களின் சேவை நமக்கு தேவை. செவிலியரை பணியில் தக்க வைத்துக்கொள்வது நமது கடமை என்பதை அரசுக்கு பரிந்துரைக்கவே வந்துள்ளேன். ஒரு நல்ல அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமே தவிர, இருக்கும் வேலைவாய்ப்புகளை குறைக்க கூடாது.

அரசு இவர்களின் போராட்டத்தை கவனமுடன் அணுகி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும். போராட்டத்தை ஒரு சமூகமாக முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவே வந்துள்ளேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுற்றுலாத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக 2 விருதுகளைப் பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டி

Last Updated :Sep 28, 2021, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.