ETV Bharat / state

Anna University: அண்ணா பல்கலைக் கழகத்தில் மொபைல் லைப்ரரி அறிமுகம்

author img

By

Published : Feb 8, 2023, 10:15 PM IST

Updated : Feb 8, 2023, 11:00 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் https://library.annauniv.edu/index.php என்ற இணையதளத்திற்கு சென்று டிஜிட்டல் முறையில் பாடப்புத்தகங்களை படித்துக் கொள்ளலாம் என நூலகத்துறையின் இயக்குநர் அறிவுடைநம்பி தெரிவித்துள்ளார்.

Anna University: அண்ணா பல்கலைக் கழகத்தில் மொபைல் லைப்ரரி அறிமுகம்
Anna University:அண்ணா பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் முறையில் பாடப்புத்தகங்கள் அறிமுகம்

Anna University: அண்ணா பல்கலைக் கழகத்தில் மொபைல் லைப்ரரி அறிமுகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நூலகத்தை பயன்படுத்துவதற்கு மேலும், வசதியாகவும், ஆராய்ச்சி இதழ்களை அதிகளவில் பார்த்து அறிவினை வளர்த்துக் கொள்வதற்காக மொபைல் லைப்ரரி என்ற மொபைல் ஆப் வசதியை கடந்த 6ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தொடங்கி வைத்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் https://library.annauniv.edu/index.php என்ற இணையதளத்திற்கு சென்று டிஜிட்டல் முறையில், பாடப்புத்தகங்களை படித்துக் கொள்ளலாம். மேலும், சர்வதேச அளவிலான இதழ்களையும் மாணவர்கள் படிக்க முடியும்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், நூலகத்துறையின் இயக்குநருமான அறிவுடைநம்பி கூறும்போது, 'அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் நூலகங்களில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை கணினி மூலமாக மட்டுமே பார்க்க முடியும். தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான மொபைல் லைப்ரரி தொடங்கப்பட்டுள்ளது.

மொபைல் ஆப் மூலமாகவே டிஜிட்டல் புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பார்க்க முடியும். மேலும், மாணவர்கள் வீட்டில் இருந்து பார்ப்பதுடன், பேருந்து, ரயிலில் பயணம் செய்யும் போதும் படிக்க முடியும். வாட்ஸ்அப் பார்ப்பது, ஃபேஸ்புக் பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து விட்டு, வீட்டில் இருந்தும் படிக்கலாம். இந்தத் திட்டத்தை துணைவேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தலின் படி அண்ணா பல்கலைக்கழக நூலகத்துறை புதிய முயற்சியாக செய்துள்ளது.

மொபைல் லைப்ரரி திட்டத்தினால் ஆராய்ச்சிகள் அதிகரித்து, 'நாக்' தரவரிசைப் பட்டியலில் மேலும் இடம்பெறும். ஆராய்ச்சி இதழ்களில் சர்வதேச அளவிலான இதழ்கள் உட்பட 20,000 இதழ்கள் கிடைக்கும். இணையதளத்தில் மில்லியன் இதழ்களைப் பெற முடியும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வேண்டிய புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்துகொண்டு பயணம் செய்யும்போதும் படிக்க முடியும்.

பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு அளிக்கிறோம். முதலில் பதிவு செய்துவிட்டால், மாணவர்கள் படிப்பினை முடிக்கும் வரையில் படிக்க முடியும். படிப்பிற்கான காலம் முடிந்தபின்னர் அவர்கள் எதையும் பார்க்க முடியாது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் படிக்கும் சுமார் 10ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் தற்பொழுது அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கும் வழங்குவதற்கான முயற்சியை துணைவேந்தர் மேற்கொண்டு வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் மாணவர்கள் இரவு 10 மணி வரையில் குளிரூட்டப்பட்ட அறையில் படிக்கலாம். அவர்களின் மடிக்கணினி கொண்டு வந்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படிக்கலாம். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற படிப்பிற்கும் தயார் ஆகத் தேவையான புத்தகங்கள் இங்குள்ளதுடன், பிற நூலகத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இங்கும் இருக்கின்றன. மொபைல் லைப்ரரி மூலம் மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் படிப்பதால் அவர்களின் நேரம் சேமிக்கப்படுவதுடன், PDF பைலாக வருவதால், குறிப்புகளையும் எடுத்துக் கொள்ள முடியும்' எனத் தெரிவித்தார்.

மொபைல் லைப்ரரி குறித்து பிஇ - இஇஇ மாணவி பொன்.அஞ்சரித்தா கூறும்போது, 'அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள மொபைல் லைப்ரரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தில் புத்தகத்தை எடுத்தாலும் 15 நாட்கள் படித்து விட்டு, மீண்டும் வந்து பதிவு செய்தப் பின், ஒரு மாதம் வரையில் பயன்படுத்த முடியும்.

அதன் பின்னர், அந்தப் புத்தக்கத்தை எடுத்துப் படிக்க முடியாது. மொபைல் லைப்ரரி மூலம் இ - புத்தகத்தை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் நாங்கள் படிக்க முடியும். இதனால், ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க முடியும்.

மேலும், பி.இ பட்டப்படிப்பில் இஇஇ பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறேன். நாங்கள் பிராஜெக்ட் செய்யும் போது அதிகளவிலான புத்தகங்களையும், ஆய்வு இதழ்களையும் பார்க்க முடியும். நூலக வசதிகளை அதிகரித்து இருப்பதால் மாணவர்கள் வெளியில் இருந்தாலும் அவர்களையும் குறிப்பிட்ட ஆய்வு இதழைப் பார்க்க கூற முடியும். இதன் மூலம் ஆராய்ச்சியினை அதிகரிக்கவும் முடியும்’ எனத் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்காக நூலகம் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டில் தனியாக நூலகம் பல்வேறு வசதிகளுடன் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொறியியல் படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் புத்தகங்களை பெறுவதற்கு கம்ப்யூட்டர் மூலம் பதிவுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"ரிஷப் பந்த் கன்னத்தில் அறைய வேண்டும்": கபில் தேவுக்கு ஏன் இந்த கோபம்?

Last Updated :Feb 8, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.