ETV Bharat / state

ஆறே நாளில் ரூ.2.36 கோடி வசூல் - வணிக வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவு

author img

By

Published : Jan 21, 2022, 8:45 PM IST

தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மூலமாக ஆறு நாட்களில் ரூ.2.36 கோடி வசூலானதாக வணிக வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நுண்ணறிவு தகவல்
நுண்ணறிவு தகவல்

சென்னை: தமிழ்நாடு வணிகவரித் துறை ஜன.21ஆம் தேதியான இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கடந்த ஜன.03 முதல் 9ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் அனைத்து வணிகவரி நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்கள் மூலமாக 11,474 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ரூ.2.36 கோடி வசூல்

அவ்வாறு வாகனத் தணிக்கை செய்ததில் 13,351 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு, 314 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வரி தண்டத்தொகையாக ரூ.2.36 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

அரசின் வரிவருவாய் மூலம் பொதுமக்கள் பல நலத்திட்டங்களைப் பெற்று பயன் பெறவேண்டும் என்பதில் வணிக வரித்துறை முதன்மை பங்கு வகுக்கிறது.

வரி ஏய்ப்புகளின்றி அரசிற்கு வரவேண்டிய வரி வருவாயை வசூல் செய்வதை உறுதி செய்திட இதுபோன்ற தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வணிகவரித் துறை அறிவித்துள்ளது.

வணிகவரித் துறை நடவடிக்கை

இது போன்று அரசுக்குச் சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே, வணிகவரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக்குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்யும் பணியினை திறம்படச் செய்வது போன்ற பல புதிய முயற்சிகள் இத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனித உரிமைக்கான போராட்டம்: சர்வதேச விருது பெற்ற எவிடென்ஸ் கதிர் - சிறப்பு நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.