ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - 4 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவு

author img

By

Published : Sep 9, 2021, 6:55 PM IST

பாலியல் வன்புணர்வு, வரதட்சணை மரணம், கணவர் அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல், உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

சென்னை: பாலியல் வன்புணர்வு, வரதட்சணை மரணம், கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல், மானபங்கம் படுத்துதல் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு 370 பாலியல் வன்புணர்வு வழக்குகளும், 28 வரதட்சணை வழக்குகளும்,கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் 781, மானபங்கம் தொடர்பாக 803 வழக்குகள் என மொத்தம் 1,982 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2020ஆம் ஆண்டு 404 பாலியல் வன்புணர்வு வழக்குகளும், 40 வரதட்சணை வழக்குகளும், கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் 689, மானபங்கம் தொடர்பாக 892 வழக்குகள் என மொத்தம் 2 ஆயிரத்து 25 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2021 ஜூன் மாதம் வரை 197 பாலியல் வன்புணர்வு வழக்குகளும், 11 வரதட்சணை வழக்குகளும், கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் 336, மானபங்கம் தொடர்பாக 803 வழக்குகள் என மொத்தம் 960 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 4 வயது சிறுவன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.