ETV Bharat / state

கரோனா: சோழிங்கநல்லூரில் 1%க்கும் கீழ் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 11, 2020, 5:09 PM IST

சென்னை: சோழிங்கநல்லூரில் மட்டுமே இறந்தவரின் விழுக்காடு 1-க்கும் கீழ் உள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்தாலும் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற இடங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.

கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது.

மாநகராட்சி பல நடவடிக்கை எடுத்து வருவதால் குணமடைத்தவரின் விழுக்காடு 95 ஆகவும் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விழுக்காடு 3 ஆகவும் உள்ளது. அதேபோல் இறந்தவரின் விழுக்காடு 1.81 ஆக உள்ளது. தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய 3 மண்டலங்களில் இறந்தவரின் விழுக்காடு 2-க்கு மேல் உள்ளது. அதே போல் சோழிங்கநல்லூரில் மட்டுமே 1-விழுக்காடுக்கு கீழ் உள்ளது.

சென்னைையில் மொத்தம் 2 லட்சத்து 06 ஆயிரத்து 024 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 471 பேர் குணடைந்துள்ளனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 819 ஆக உள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 734 ஆக உள்ளது.

மண்டல வாரியான இறந்தவர்களின் பட்டியல்,

கோடம்பாக்கம் - 414 பேர்

அண்ணா நகர் - 418 பேர்

ராயபுரம் - 354 பேர்

தேனாம்பேட்டை - 469 பேர்

தண்டையார்பேட்டை - 321 பேர்

திரு.வி.க. நகர் - 382 பேர்

அடையாறு - 286 பேர்

வளசரவாக்கம் - 192 பேர்

அம்பத்தூர் - 233 பேர்

திருவொற்றியூர் - 154 பேர்

மாதவரம் - 90 பேர்

ஆலந்தூர் - 140 பேர்.

சோழிங்கநல்லூர் - 47 பேர்

பெருங்குடி - 120 பேர்

மணலி - 40 பேர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.