ETV Bharat / state

ஒபிஎஸ் தரப்பினரை பார்த்தால் காமெடியாக இருக்கிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Jul 16, 2022, 8:14 AM IST

காமராஜர் 120வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஒபிஎஸ் தரப்பிற்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்வதைக் கேலிக் கூத்தான விஷயமாகத்தான் பார்க்க முடியும். அவர்கள் காமெடியாகதான் இருக்கிறார்கள் என கூறினார்

ஒபிஎஸ் தரப்பினரை பார்த்தால் காமெடியாக இருக்கிறது
ஒபிஎஸ் தரப்பினரை பார்த்தால் காமெடியாக இருக்கிறது

சென்னை: காமராஜர் 120வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பெருந்தலைவர் காமராசர், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்தது மட்டுமல்லாமல், கல்வி மேம்பாடு அடையவேண்டும் என்பதற்காக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். அதனால்தான் கல்விக் கண் திறந்தவர் என்று சொன்னால் நாம் உடனே சொல்லக்கூடிய பெயர் பெருந்தலைவர் காமராசர்.

சேலம் பெரியார் பல்லைக்கழக தேர்வில் சாதி சர்ச்சை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஜாதி, மதம், மொழி இவை அனைத்தையும் கடந்ததுதான் கல்வி நிறுவனமாக இருக்கவேண்டும். உயர்க்கல்வித்துறை எந்த அளவுக்கு அக்கறை இல்லாது இருக்கிறது என்பதற்கு இது உதாரணம். ஒரு கேள்வித்தாளில் ஜாதியைக் குறிப்பிட்டு, அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கேள்விகளை எழுப்பியது அமைச்சர் அத்துறையில் கவனம் செலுத்தவில்லை என்றுதான் இது காட்டுகிறது. எது தாழ்ந்த ஜாதி கேட்பது என்பது வளர்ந்த இந்த சமுதாயத்தில் இதுபோன்ற கேள்வியை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒபிஎஸ் தரப்பினரை பார்த்தால் காமெடியாக இருக்கிறது
ஒபிஎஸ் தரப்பினரை பார்த்தால் காமெடியாக இருக்கிறது

இப்போது அவர்கள் கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவில்லை என்று சொல்கிறார்கள். வேறு மாநிலம் தயாரித்தது என்று சொல்கிறார்கள். தயாரித்தாலும் இதனை யார் பார்ப்பது. உயர் கல்வித்துறை என்ன செய்கிறது. பொறுப்புகளைத் தட்டி கழிக்காமல் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் புத்திசாலியான அரசுக்கு அடையாளமாக இருக்கும். ஆனால் இது புத்திசாலி அரசா என்றால் நிச்சயமாக இல்லை.

ஓ.பன்னீர்செல்வம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, உடன் யாரும் இல்லாத சூழ்நிலையிலே ஓபிஎஸ் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அந்த கடிதத்தில் சென்ற வருடம் நீக்கியுள்ளதாக இருக்கிறது. கழகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம். பொதுக்குழு ஒன்றுகூடி 99 சதவீத நிர்வாகிகள் எடப்பாடியாரை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்துள்ளனர்.

அவர் தனது கடமையைச் செய்து வருகிறார். ஓபிஎஸ்சை நீக்குவதற்குரிய அனைத்து அதிகாரம் எங்களிடம் உள்ளது. ஒபிஎஸ் தரப்பிற்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்வதைக் கேலிக் கூத்தான விஷயமாகத்தான் பார்க்க முடியும். மக்கள் இதனை எள்ளி நகையாகக்கூடிய விஷயமாகத்தான் பார்ப்பார்கள். அவர்கள் காமெடியாகதான் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் நீக்கம் குறித்து டி.ஜெயக்குமார்: தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்வார்கள். ஓபிஎஸ்சை நீக்கும்போது கூட பொங்கவில்லை. அவர் மகனை நீக்கும்போது வெடித்துவிட்டார். பாராளுமன்ற தேர்தலில் மகன் மட்டும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம்தானே அவருக்கு இருந்தது. முரசொலியில் ரவீந்தரநாத் குறித்துக் கட்டுரை வந்த காரணத்தினால் அவர் நீக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் போது கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கட்சியின் கொள்கைக்கு மாறாகத்தான் அவர் நடவடிக்கை இருக்கிறது.

ஓபிஎஸ் மனம் திருந்தி வந்தால் கட்சியில் சேர்க்கப்படுவாரா என்று கேட்டதற்கு, அவரால் கட்சியினருக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டது. கட்சிக்கு விரோதமான நீதிமன்றத்திற்குச் சென்றது. உட்கட்சி விவகாரத்தை கட்சியில் பேசுவதை விட்டு நீதிமன்றத்தையே ஒரு கருவியாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று குட்டு குட்டினார்கள்.

ஒபிஎஸ் பொறுத்தவரையில் அவர் கட்சியில் இல்லை. அவர் எந்த கட்சிக்குச் சென்றாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவர் எந்த கட்சிக்கும் போகலாம். அவரின் உரிமையில் நான் தலையிட முடியாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்துக்குச் சீல் வைத்ததை எதிர்த்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மனு - தீர்ப்பை தள்ளிவைத்த நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.