ETV Bharat / state

"அமமுக பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவார்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Aug 11, 2022, 12:38 PM IST

அமமுக பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவார் என நினைக்கிறேன் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அமமுக பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவார் என நினைக்கிறேன் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ராமச்சந்திர ஆதித்தனாரின் 88 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் மாலை முரசு அலுவலகத்தில், ராமச்சந்திர ஆதித்தனாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "தமிழை வளர்த்த பெருமைக்குரியவர் ராமச்சந்திர ஆதித்தனார். எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. எத்தகைய சாதனைகளை செய்தோம் என்பதே முக்கியம். வாழ்ந்து மறைந்த தெருவிற்கு கூட இவர் பெயரை சூட்டியது அதிமுக அரசு.

100% போதைப்பொருள் தடுப்பதில் திமுக அரசு தவற விட்டுள்ளது. சர்வாதிகாரியாக மாறுவேன், சர்வாதிகாரியாக மாறுவேன் என்று மட்டுமே முதலமைச்சர் கூறி வருகிறார். தனது கட்சிக்காரர்கள் தவறு செய்யும்போதும் சர்வாதிகாரியாக மாறுவேன் என்றும் தெரிவிக்கிறார். ஆனால் கட்சிக்காரர்கள் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டுதான் வருகிறார்கள்.

கொல கொலயா முந்திரிக்கா போன்று கொலை கொலையாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்வதில் சர்வாதிகார ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுகவை அழிப்பதில்தான் சர்வாதிகாரியாக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். பருவமழை வரவிருக்கும் நிலையில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை.

குளங்கள், ஏரிகள் தூர்வாராமல் தற்போது மழை பெய்தால் தண்ணீர் முழுமையாக கடலுக்குள் சேர்க்கிறது. இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் முழுமையாக குடும்ப ஆட்சிதான் இருந்தது. உதயநிதிக்கு புகழ் பாடுபவர்தான் தற்போது கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார்.

ஆனால் மாணவர்களுக்கும், பள்ளி கல்வித்துறைக்கும் எந்த ஒரு கட்டமைப்புகளும் செய்யாமல் இருக்கிறார். திமுக முழுக்க முழுக்க நில அபகரிப்பு தொழிலை செய்து வருகிறது. இதனை தடுப்பதற்காக சட்டம் கொண்டு வந்தது அதிமுக அரசு. இருப்பினும் தற்போது நாங்கள் பாதுகாப்பாளர்கள் என்று மீண்டும் நில அபகரிப்பு செய்து வருகின்றனர்.

வருமுன் காப்போர், அறிவாளி வந்தபின் காப்பாற்றுவது கோமாளி. தற்போது பருவமழை பெய்த பிறகு போட்டோஷூட் எடுப்பதற்கும், விளம்பரம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள். போதைப்பொருள் கடத்துபவர்கள் பயன்படுத்துவார்கள் என அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடக்கினார்.

அதுமட்டுமில்லாமல், எங்கள் (அதிமுக) ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. தற்போது காவல்துறை முழுமையாக செயல்படவில்லை. ஏவல் துறையாக அடக்கி வைத்துள்ளார்கள். ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படிதான் இயங்குவார். அதை மீறி இயங்க முடியாது.

அவர்கள் அரசியல் பேசியது என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அமமுக பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. அமமுக பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஓபிஎஸ்-ஐ அழைப்பார்கள் என நினைக்கிறேன். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என்று அப்படியே சென்று விடட்டும். அவருக்கு வாழ்த்துகள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக பிளவுக்கு திமுக தான் காரணம்: சசிகலா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.