ETV Bharat / state

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை : ஒ.பி.எஸ். உறுதி..!

author img

By

Published : Nov 16, 2019, 4:48 PM IST

சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

houston university Administratives met Deputy CM OPS

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை , ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் ரேணு கத்தார், ஹூஸ்டன் பெருநகர பார்ட்னர்ஷிப் சூசன் டேவன்போர்டு ஆகியோர் தனியார் ஓட்டலில் நேரில் சந்தித்தனர். அப்போது ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் ரேணு கத்தார் 'தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார்.

இது குறித்து துணை முதல்வர் பதிலளித்து பேசுகையில், தமிழ்நாடு திரும்பியவுடன் முதலமைச்சர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ஒ.பி.எஸ். - ஹூஸ்டன் பல்கழைகழக நிர்வாகிகள் சந்திப்பு

மேலும், தமிழ்நாட்டுக்கும் டெக்சாஸ் மாகாணத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஆகவே இங்குள்ளவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்குப் பல வாய்ப்புகள் உள்ளதாக நம்புகிறேன். எனவே இங்குள்ள தொழில்முனைவோர் குழு, முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்த தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

பல்கலைகழக நிர்வாகிகளுடன் ஒ.பி.எஸ்
பல்கலைகழக நிர்வாகிகளுடன் ஒ.பி.எஸ்

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அமெரிக்க தொழிலதிபர்கள் இணைய வேண்டும்' - துணை முதலமைச்சர் வேண்டுகோள்!

Intro:Body:அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை , தனியார் ஓட்டலில் ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் ரேணு கத்தார், ஹூஸ்டன் பெருநகர பார்ட்னர்ஷிப் சூசன் டேவன்போர்டு ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் ரேணு கத்தார் 'தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். இது குறித்து துணை முதல்வர் பதிலளித்து பேசுகையில், தமிழகம் திரும்பியவுடன் முதல்வரிடம் கலந்தாலோசித்து தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டுக்கும் டெக்சரஸ் மாகாணத்துக்கு பல ஒற்றுமைகள் உள்ளன. ஆகவே இங்குள்ளவர்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன என நம்புகிறேன். எனவே இங்குள்ள தொழில் முனைவோர் குழு முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்த தமிழகத்துக்கு வர வேண்டும் என துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்பின் பொது இந்திய தூதரக அதிகாரி ராகேஷ் பனாட்டி, தமிழக நிதி துறை செயலர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.