ETV Bharat / state

ஆக்சிஜன் சிலிண்டர் தயாரா? மீண்டும் அதிகரிக்கும் கரோனா- மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை

author img

By

Published : Jun 4, 2022, 1:08 PM IST

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகரித்துவரும் கரோனா பரவல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
அதிகரித்துவரும் கரோனா பரவல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பாதிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூசன் நேற்று (ஜூன்.3) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார்.

தொடர்ந்து இன்று (ஜூன் 4) சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கரோனா படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.

அதிகரித்துவரும் கரோனா பரவல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விடுத்த எச்சரிக்கை
அதிகரித்துவரும் கரோனா பரவல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விடுத்த எச்சரிக்கை

அந்த கடிதத்தில் "நாடு முழுவதும் ஒரு வாரமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சில நாள்களாக கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆகவே, அந்தந்த மாவட்ட அலுவலர்கள் மண்டல அளவிலும், தெரு அளவிலும் கண்காணிக்க வேண்டும். அதோடு எட்டு மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் பகுதிகளில் கரோனா கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக அலுவலர்கள் எடுக்க வேண்டும்.

குறிப்பாக கல்லூரி விழாக்கள், கல்லூரி விடுதிகளில் கரோனா கிளஸ்டர் உருவாகுகிறது. இதன்மூலம் மாணவர்களின் குடும்பங்களுக்கும் பரவுகிறது. ஆகவே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி கல்லூரிகள், விடுதிகளில் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு இடத்தில் கிளஸ்டர் உருவாகினால், அந்த இடத்தை உடனடியாக சுகாதாரத் துறை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். மேலும் பரவாத வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். கல்வி நிலையங்களில் கிளஸ்டர் ஏற்பட்டால், அங்கு உள்ளவர்களைப் பரிசோதிக்க வேண்டும்.

அதிகரித்துவரும் கரோனா பரவல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
அதிகரித்துவரும் கரோனா பரவல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

குறிப்பாக படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து கட்டுப்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வட மாநில மாணவர்களால் கல்வி நிறுவனங்களில் கரோனா அதிகரிப்பு- மா. சுப்பிரமணியன்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.