ETV Bharat / state

நீட் தேர்வு விவகாரம்.. ஆளுநர் பதிலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்!

author img

By

Published : Aug 12, 2023, 10:53 PM IST

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவை ஆளுநர் சிதைக்கின்றார் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்

நீட் தேர்விற்கு நான் எப்போதும் தடை கொடுக்க மாட்டேன்- ஆளுநர் ஆர்.என்.ரவி
நீட் தேர்விற்கு நான் எப்போதும் தடை கொடுக்க மாட்டேன்- ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நீட் தேர்விற்கு நான் எப்போதும் தடை கொடுக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என் ரவி கூறியதற்கு ஸ்ரீபெருமபத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் இன்று (ஆகஸ்ட். 12) ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அதில் மாணவரின் தந்தை ஒருவர் நீட் தேர்விற்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் என கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்விற்கு நான் எப்போதும் தடை கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் நீட் தேர்வானது பொது பட்டியலில் உள்ளதால் குடியரசு தலைவரிடம் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்விற்காக கோச்சிங் சென்டர் சென்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக் கூடங்களில் பாடம் நடத்தும் போதே மாணவர்களை நீட் தேர்விற்கு தயார் செய்யலாம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்கள் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும் என கூரினார்.

நீட் தேர்விற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வு இல்லாத காலத்தை ஒப்பிட்டு பார்க்கையில் நீட் தேர்விற்கு பின்னரே அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வுக்கு 7.5% இடஒதுக்கீடு கொடுத்த பின்னரே 600 மாணவர்கள் மருத்துவர்களாயினர். அதுமட்டுமின்றி கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வின் தொடர்பாக எந்த தற்கொலையும் நடைபெறவில்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு கட்சி தலைவர்கள் 10 லட்சம், 20 லட்சம் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதனால் அரசியல்வாதிகளின் அரசியலுக்கு மாணவர்கள் பலியானார்கள். மேலும் நீட் தொடர்பான தவறான புரிதலை கைவிட வேண்டும். நீட் தேர்வானது மாணவர்களை போட்டி திறன் கொண்டவர்களாக உருவாக்குகிறது என கூறினார்.

"நீட் தேர்விற்கு நான் எப்போதும் தடை கொடுக்க மாட்டேன்" என ஆளுநர் ஆர்.என் ரவி கூறியதற்கு ஸ்ரீபெருமபத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வபெருந்தகை கண்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்ல, நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்றும், பயிற்சி மையம் இருந்தால்தான் மாணவர்கள் நீட்டில் வெற்றி பெற முடியும் என்பது கட்டுக்கதை என்றும், மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக இருக்க விடமாட்டேன் என்றும் தான்தோன்றித்தனமாக பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதாமல் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களான மோகன்காமேஸ்வரன், பழனிச்சாமி, முகமதுரீலா, பாலாஜி, தணிகாசலம், ராமமூர்த்தி, சத்தியமூர்த்தி, கங்காராஜசேகர், ஆர்.பி.சிங், கே.எம்.ஷெரியன், கஸாலி போன்ற அனைவரும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதோடு ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நீட் பயிற்சி மையங்களுக்கு துணை போகிறார் என்றார்.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரை குடியரசு தலைவர் உடனடியாக திரும்ப பெற தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசியல் லாபங்களுக்காக சாதி வெறியைத் தூண்டும் திமுக - அண்ணாமலை விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.