ETV Bharat / state

நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்: பன்வாரிலால் புரோகித் பேச்சு!

author img

By

Published : Dec 16, 2019, 6:14 PM IST

சென்னை:  ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுபவர்களிடம்  நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் இருந்தால் மட்டுமே  நாட்டின் வளர்சிக்கு உதவும் என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

governor-panwari-lal-purohit-speech-in-chennai-iit
governor-panwari-lal-purohit-speech-in-chennai-iit

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 12ஆவது சர்வதேச உயர் ஆற்றல் பாதுகாப்பு தளவாட உற்பத்தி பொருட்கள் தொடர்பான கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கில் உயர் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளையும், பாதுகாப்புத்துறையின் கண்காட்சியையும் பன்வாரி லால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

அதையடுத்து அவர் பேசுகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் ஆற்றல் பாதுகாப்பு தளவாட உற்பத்தி பொருட்கள் குறித்த ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி முன்னோடியாக இருக்கிறது. அறிவியலில் எல்லோரிடமும் நேர்மையும், வெளிப்படை தன்மையும் இருந்தால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும்.

இஸ்ரோ நிறுவனத்தின் மூலம் ஏவப்பட்ட சந்திராயன், மங்கல்யான் செயற்கோள்கள் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டா உலகளவில் புகழ் பெற்றுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பணியாற்றிய இஸ்ரோ மையத்தினை இளம் விஞ்ஞானிகள் பார்வையிட வேண்டும்.

ளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

ராமேஸ்வரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அப்துல்காலாமின் வாழ்க்கை அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. மிகப்பெரிய பதவியில் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்து எப்போதும் தன்னால் பிறருக்கு என்ன கொடுக்க முடியும் என்பதையே கலாம் குறிக்கோளாக கொண்டிருந்தார். விஞ்ஞானிகள் அப்துல்கலாமை எடுத்துகாட்டாக கொண்டு அவர் எழுதிய அக்னிச்சிறகுகள் புத்தகத்தை தங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: உன்னாவ் வழக்கு: பாஜக எம்.எல்.ஏ குற்றவாளி எனத் தீர்ப்பு

Intro:

நேர்மையும், வெளிப்படைத்தன்மையும்
நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்
பன்வாரிலால் புரோகித் பேச்சு Body:

நேர்மையும், வெளிப்படைத்தன்மையும்
நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்
பன்வாரிலால் புரோகித் பேச்சு

சென்னை,

ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுபவர்களிடம்  நேர்மையும்,   வெளிப்படைத்தன்மையும்  இருந்தால் மட்டுமே  நாட்டின் வளர்சிக்கு உதவும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.


சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 12 வது சர்வதேச உயர் ஆற்றல் பாதுகாப்பு தளவாட உற்பத்தி பொருட்கள் தொடர்பான கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துக் கொண்டார்.
இந்த கருத்தரங்கில் உயர் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கியும், பாதுகாப்புத்துறையின் கண்காட்சியை துவக்கி வைத்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் ஆற்றல் பாதுகாப்பு தளவாட உற்பத்தி பொருட்கள்  குறித்த ஆராய்ச்சியில் சென்னை ஐ ஐ டி முன்னோடியாக இருக்கிறது. அறிவியலில் எல்லோரிடமும்  நேர்மையும், வெளிப்படை தன்மையும்  இருந்தால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும்.

இஸ்ரோ நிறுவனத்தின் மூலம் ஏவப்பட்ட சந்திராயன், மங்கல்யான் செயற்கோள்கள் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டா உலகளவில் புகழ் பெற்றுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பணியாற்றிய இஸ்ராே மையத்தினை இளம் விஞ்ஞானிகள் பார்வையிட வேண்டும். சாதாரண குடும்பத்தில் ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்காலாமின் வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. மிகபெரிய பதவியில் இருந்த போதும் எளிமையாக வாழ்ந்து எப்போதும் தன்னால் பிறருக்கு என்ன கொடுக்க முடியும் என்பதையே குறிக்கோளாக கொண்டிருந்தார். விஞ்ஞானிகள் அப்துல்கலாமை எடுத்துகாட்டாக கொண்டு அவர் எழுதிய அக்னிச்சிறகுகள் புத்தகத்தை தங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



3 G live pack

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.