ETV Bharat / state

ஆவணதாரர் பெயர் காட்சிப்படுத்த நடவடிக்கை - அரசாணை வெளியீடு

author img

By

Published : Nov 21, 2021, 10:42 AM IST

சார்பதிவாளர் அலுவலகங்களில் அடையாளவில்லை காட்சிக் கருவியில் (Token Display Unit) ஆவணதாரர் பெயரையும் காட்சிப்படுத்தும் முறையினை ரூ.3.40 கோடி செலவில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ஆவணதாரர் பெயர் காட்சிப்படுத்த நடவடிக்கை
ஆவணதாரர் பெயர் காட்சிப்படுத்த நடவடிக்கை

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்தப்பட்டுள்ள காட்சிக் கருவியில் அடையாளவில்லை எண்ணோடு ஆவணதாரர்களின் பெயரும் காட்சிப்படுத்தப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது இந்த திட்டமானது ரூ.3.40 கோடி செலவில் நடைமுறைப்படும் என அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி மேம்படுத்தப்பட்ட காட்சிக் கருவிகளை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிவின்போது வரிசைக்கிரம எண்ணோடு ஆவணதாரரின் பெயரும் சேர்த்து அறிவிக்கப்படும்.

இதனால் சரியான முன்னுரிமை உறுதிப்படுத்தப்படுவதுடன், பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும். மேலும், பதிவு முறையானது பொதுமக்களுக்கு வெளிப்படையான குழப்பமற்ற வரிசைக் கிரமத்தை கடைபிடிக்கவும் ஏதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Viluppuram Floods - தளவானூரில் 6 கிலோமீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.