ETV Bharat / state

விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.1.90 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

author img

By

Published : Mar 18, 2020, 8:47 PM IST

சென்னை: விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடத்திவரப்பட்ட தங்கம்
கடத்திவரப்பட்ட தங்கம்

அபுதாபியிலிருந்து எத்தியாா்ட் ஏா்லைன்ஸ் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்து மீண்டும் காலை 4.50 மணிக்கு அபுதாபி புறப்பட தயாரானது. அந்த விமானத்தை சுத்தப்படுத்த ஊழியா்கள் சென்றுள்ளனர்.

அப்போது, விமானத்தின் இருக்கைகளுக்கு அடியில் இரண்டு பாா்சல்கள் இருப்பதைக் கண்ட ஊழியர்கள், விமான பாதுகாப்பு அலுவலர்கள் பாா்சலைப் பிரித்து பாாத்தபோது அதில் நான்கு கிலோ எடை கொண்ட ஆறு தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. பின்னர், ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்கக்கட்டிகள் சுங்கத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் இன்று காலை 5.30 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சென்னை வந்து மீண்டும் காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்பட தயாரானது. அதனை விமான ஊழியா்கள் சுத்தப்படுத்தும்போது, விமானத்தின் இருக்கைக்கு அடியில் சிறிய பாா்சல் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர். அதனைப் பிரித்து பாா்த்தபோது அதில் 600 கிராம் எடைகொண்ட மூன்று தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. பின்னர், 25.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அலுவலகர்களிடம் ஒப்படைத்தனர்.

கடத்திவரப்பட்ட தங்கம்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வெளிநாட்டு விமானங்களில் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ஆகும். தங்கத்தைக் கடத்தி வந்து விமானத்திலேயே மறைத்து வைத்துவிட்டு தப்பியோடிய ஆசாமிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.