ETV Bharat / state

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை? சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கூறியது என்ன!

author img

By

Published : Mar 24, 2023, 12:37 PM IST

உப்பு அதிகம் தயாராகும் வேதாரணயத்தில் காஸ்டிக் தொழிற்சாலை அமைக்கக் கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் கோரிக்கை விடுத்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. கடந்த 20ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து 22 ஆம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு தமிழக சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (மார்ச் 23) தமிழக சட்டப்பேரவையில் 2023 - 24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் விவாதக் கூட்டம் நடைபெற்றது. முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெய்ராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கேள்வி நேரம் இல்லாமல், நேரமில்லா நேரம் முதலில் நடத்தப்பட்டு. பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பட்டட ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் நேற்று (மார்ச். 23) இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட மசோதாவை தாக்கல் செய்து முதலமைச்சர் பேசினார். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப் பேரவையில் நடைபெற்றது.

இதில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டிய குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடந்த சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓஎஸ் மணியன் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய வேதாரண்யம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓஎஸ் மணியன், வேதாரண்யத்தில் உப்பு டன் கணக்கில் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று பிரிக்கப்படுகிறது. மேலும் உப்பிலிருந்து 67 மூலப் பொருட்கள் எடுக்கப்படுகிறது. வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைத்தால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த அதிமுக ஆட்சியில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மீண்டும் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். மேலும் கடல் நீரில் இருந்து உப்பு எடுக்கப்படுவதால் மழை நீரை விட சுத்தமான நீர் கிடைக்கும். இதையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.