ETV Bharat / state

‘ஜெயலலிதாவின் ஆவி சும்மா விடாது’ - சசிகலாவுக்கு சாபம் விட்ட ஜெயக்குமார்

author img

By

Published : Dec 24, 2022, 3:49 PM IST

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தவர்களை அவரது ஆவி சும்மா விடாது, தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ன் 35 ஆவது நினைவு தினத்தை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர். உறுதி மொழியேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "13 வருடம் திமுகவை வனவாசதிற்கு அனுப்பி வைத்தவர் எம்ஜிஆர்.

தேர்தல் பணிகளை ஒ.பன்னீர்செல்வம் முன்னெடுப்பதாக சொல்வது எல்லி நகையாட கூடிய ஒரு கருத்து. எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியது போல எங்கள் தலைமையில் தான் கூட்டணி. தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் ஒதுக்கும் இடம் தான். எங்களை யாரும் கட்டாய படுத்த முடியாது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கூறியது போல, கட்சியிலும், கூட்டணியிலும் தினகரன், ஓபிஸ், சசிகலா என யாரையும் சேர்த்து கொள்வதில்லை.

2024ஆம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம், மக்களிடம் இந்த ஆட்சி மீது அதிருப்தி உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆயிரம் ரூபாய் திமுக அரசு கொடுத்திருக்கிறது. கரும்பு கொடுக்காததால் விவசாயிகள் கரும்பை எங்கு சென்று விற்பனை செய்வார்கள். கரும்பு விவசயிகளுக்கு பெரும் துரோகம் செய்கிறது இந்த அரசு.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு விவகாரத்தில் சசிகலா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அதிமுக வலியுறுத்துகிறது. ஜெயலலிதா வெளிநாடு சென்று சிகிச்சை எடுக்க விரும்பவில்லை என சசிகலா கூறுவது வடிகட்டிய பொய்.

ஆறுமுகசாமி ஆணை அறிக்கைபடி (சிஐஜி) செய்ய ஜெயலலிதா ஒப்புக்கொண்டார். ஆனால் ஏன் இவர்கள் அறுவை சிகிச்சை செய்யவில்லை. அன்றே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்திருந்தல் இன்று அவர் மீண்டு வந்து 2021-ல் ஆட்சியை பிடித்திருபார். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தவர்களை அம்மாவின் ஆவி சும்மா விடாது, தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்" என்றார்.

இதையும் படிங்க: ’திமுகவை வேரோடு வீழ்த்திக் காட்டுவோம்’ - ஈபிஎஸ் தரப்பு உறுதிமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.