ETV Bharat / state

முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் மறைவு: காவல் துறை மரியாதை வழங்க உத்தரவு!

author img

By

Published : Jun 23, 2023, 1:30 PM IST

தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் நேற்று (ஜூன் 22) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 101. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.

முன்னாள் தலைமைச் செயலாளரான பி.சபாநாயகம், 33 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் அதிகாரியாக ராஜாஜியுடன் தனிச் செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் உடனும் பணியாற்றியுள்ளார்.

1971 மார்ச் மாதம் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், ஏப்ரல் 1976 வரை அப்பதவியில் தொடர்ந்தார். மேலும் தமிழ்நாட்டில் ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, தொழில் துறைச் செயலாளராக இருந்து தமிழ்நாட்டின் தொழில்களின் தளமாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15, 1922இல் பிறந்த சபாநாயகம், 1945ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். மேலும், சபாநாயகம் ஆகஸ்ட் 31, 1980 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மார்ச் 20, 1947இல் போர் சேவை மூலம் இந்திய நிர்வாகப் பணியில் நியமிக்கப்பட்டார். அவர் பொள்ளாச்சியில் சப்-கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். பிறகு மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். இது தவிர, அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு கமிஷன்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்: "மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழகத்தின் முன்னாள் அரசு தலைமைச் செயலருமான ப.சபாநாயகம் மறைவுக்கு நெஞ்சார்ந்த இரங்கல்கள். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மக்கள் சேவை பங்களிப்புக்காக அவர் நீண்டகாலம் நினைவுகூரப்படுவார்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாட்டின் முன்னாள் அரசு தலைமை செயலருமான ப.சபாநாயகம் அவர்களின் மறைவுக்கு நெஞ்சார்ந்த இரங்கல்கள். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மக்கள் சேவை பங்களிப்புக்காக அவர் நீண்டகாலம் நினைவுகூரப்படுவார். ஓம் சாந்தி.- ஆளுநர் ரவி pic.twitter.com/DaSCLLTeHn

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரங்கல்: "ராஜாஜி, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றவர் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம்.

மேலும், விடுதலைக்கு முன்பான ஐ.சி.எஸ் காலத்தில் இருந்து தற்போதுள்ள ஐ.ஏ.எஸ் முறை வரை 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப்பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர். ஆட்சிப்பணிக்கு வருவதற்கு முன்பாக ராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

  • முன்னாள் தலைமைச் செயலாளர் திரு.சபாநாயகம் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/fAuJ9bKyKv

    — TN DIPR (@TNDIPRNEWS) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நேர்மையும், துணிச்சலும், தலைமைப் பண்பும், செயல்திறனும் ஒருங்கே அமையப் பெற்ற சபாநாயகம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன், அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

  • முன்னாள் தலைமைச் செயலாளர் திரு சபாநாயகம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/7PKkXPhOV7

    — TN DIPR (@TNDIPRNEWS) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகத்தின் இறுதிச்சடங்கு மாநில காவல் துறை மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Opposition Meeting: பாஜகவுக்கு எதிராக விறுவிறுப்படையும் எதிர்கட்சிகள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.