ETV Bharat / state

சென்னை ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: காரணம் என்ன?

author img

By

Published : Nov 20, 2019, 1:54 AM IST

சென்னை: அம்பத்தூர் ஏரியில் நச்சு கலந்த நீரில் உள்ள மாசினால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

சென்னை ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

சென்னை மாநகராட்சி மண்டலம் ஏழுக்கு உட்பட்ட அம்பத்தூர் ஏரி சுமார், 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. இந்த ஏரியில் முழு அளவு நீர் நிரம்பினால் கூட, 0.04 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு இருக்கும். தற்போதுள்ள 0.04 டிஎம்சி நீரிலும் முக்கால் வாசி கழிவுநீர் கலந்து இருப்பதுதான் கொடுமை.

இந்த ஏரியை சுற்றியுள்ள திருமுல்லைவாயல், அம்பத்தூர், அயப்பாக்கம் ஐ.சி.எப். காலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கழிவு நீர் அனைத்தும் ஏரியில் கலப்பதால் இங்குள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.

தற்போது பெய்த மழையினால் ஏரி நிரம்பி வழிந்து வரும் நிலையில், அதிலுள்ள கெண்டை வகை மீன்கள், ஏரியின் நீர் நச்சு தாங்கமுடியாமல் டன் கணக்கில் செத்து மிதக்கின்றன.

சென்னை ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

இந்திய நகரங்களில் சென்னையின் குடிநீரும் தரமற்று இருக்கும் நிலையில், மீன்கள் வாழும் அளவுக்கு கூட சென்னையின் நீரில் நச்சுத் தன்மை கலந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசுதான் தலையிட்டு சரியான முடிவை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க...கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !

Intro:அம்பத்தூர் ஏரியில் கண்மாய் வழியே இருந்து வெளியே விழும் மீன்கள் டன் கணக்கில் செத்து மிதந்தன.நச்சு கலந்த நீரில் உள்ள மாசினால் இந்த மீன்கள் செத்துமிதப்பதாக அதிகரிகள் தகவல் அளித்துள்ளனர்Body:அம்பத்தூர் ஏரியில் கண்மாய் வழியே இருந்து வெளியே விழும் மீன்கள் டன் கணக்கில் செத்து மிதந்தன.நச்சு கலந்த நீரில் உள்ள மாசினால் இந்த மீன்கள் செத்துமிதப்பதாக அதிகரிகள் தகவல் அளித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி மண்டலம் 7 க்கு உட்பட்ட அம்பத்தூர் ஏரி சுமார், 200 ஏக்கர் பரப்பளவில், இந்த ஏரி பரந்து விரிந்து அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய ஏரி. ஆனால், முழு அளவு நிரம்பினால் கூட, 0.04 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே இருப்பு இருக்கும். தற்போதுள்ள 0.04 டிஎம்சி நீரிலும் முக்கால் வாசி கழிவுநீர் கலந்து இருப்பதுதான் கொடுமை. இந்த ஏரியை சுற்றியுள்ள திருமுல்லைவாயல், அம்பத்தூர்,அயப்பாக்கம் ஐ.சி.எப் காலனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கழிவு நீர் அனைத்தும் ஏரியில் கலப்பதால் இந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. தற்போது பெய்த மழையினால் ஏரி சிறிது சிறிதாக நிரம்பி வழிந்து வரும் நிலையில் அதிலுள்ள கெண்டை வகை மீன்கள் ஏரியின் நீர் நச்சு தாங்கமுடியாமல் டன் கணக்கில் செத்து மிதக்கின்றன.பின்னர் அதிகாரிகளிடம் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு இதுவரை அம்பத்தூர் சுகாதார துறை அலுவலர் சீலா இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை, நோய் பரவும் அபாயத்தில் உள்ள பொதுமக்கள் ஏற்கனவே கடந்த வருடம் கொரட்டூர் ஏரியில் இதேபோல் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்து இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.