ETV Bharat / state

பேராசிரியர் பாலகுருசாமி போன்று வாழ்க்கை நடத்துவது கடினம் - நிர்மலா சீதாராமன்

author img

By

Published : Nov 23, 2019, 3:58 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி போன்று நேர்மையாக வாழ்க்கை நடத்துவது கடினமான பணி என்று பாலகுருசாமி வாழ்க்கை வரலாறு குறித்த நூல் வெளியீட்டு விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த "நேர்மையின் பயணம்" என்ற நூலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதனைக் கேரள மாநில முன்னாள் ஆளுநர் சதாசிவம் பெற்றுக்கொண்டார்.

சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், துணை வேந்தர் சூரப்பா, பேராசிரியர்கள், பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா, பாஜக மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆய்வாளர், பேராசிரியர், கல்வியாளர் என பல முகங்களைக் கொண்ட பேராசிரியர் பாலகுருசாமி தொழில்நுட்ப அறிவியல் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன்

நிகழ்ச்சியில் அவரது சிறப்பியல்புகள் பற்றி பலரும் புகழ்ந்து பேசினர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "பேராசிரியர் பாலகுருசாமி போன்று நேர்மையான வாழ்க்கை நடத்துவது கடினமான பணி. அது சவால் நிறைந்ததும்கூட. வாழ்க்கையில் எத்தனை இடர்பாடு இருந்தாலும் விடாமுயற்சி கொண்டவர்கள் விவசாயிகள்.

அதேபோன்று சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாலகுருசாமி, பல சாதனைகளை படைத்துள்ளார். இப்போதுள்ள துணை வேந்தர்களுக்கும் பாலகுருசாமி முன்னுதாரணமாகத் திகழ்கிறார்” என்று புகழ்ந்துரைத்தார்.

இதையும் படிங்க: அரசின் திட்டங்கள் எளிதில் மக்களைச் சென்றடையவே புதிய மாவட்டங்கள் - ஆர்.பி. உதயக்குமார்

Intro:Body:

Visual via Live kit


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இ.பாலகுருசாமியின் வழக்கை வரலாற்று புத்தகமான "நேர்மையில் பயணம்" புத்தகத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார் . இதன் முதல் பிரதியை கேரள மாநில முன்னாள் ஆளுநர் சதாசிவம் பெற்றுக்கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணைவேந்தர் சூரப்பா, பேராசிரியர்கள், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆய்வாளர், பேராசிரியர், கல்வியாளர் என பல முகங்களை கொண்ட இ.பாலகுருசாமி தொழில்நுட்ப அறிவியல் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். நிகழ்ச்சியில் அவரது சிறப்பு இயல்புகள் பற்றி பலரும் புகழ்ந்து பேசினர். நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது:


பேராசிரியர் பலகுருசாமி போன்று நேர்மையான வாழ்க்கை நடத்துவது கடினமான பணி. அது சவால் நிறைந்தது. வாழ்க்கையில் எத்தனை இடர்பாடு இருந்தாலும் விடாமுயற்சி கொண்டவர்கள் விவசாயிகள். சாதாரண குடும்பத்தில் பிறந்து வந்த பலகுருசாமி இது போன்று சாதனை படைத்துள்ளார். இப்போதுள்ள துணைவேந்தர்களுக்கும் பாலகுருசாமி முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.


தளரா விடாமுயற்சி உள்ளிருந்து தான் வரும், வெளியிலிருந்து வராது. கற்று தரும் அனைவருமே ஆசிரியர்கள் தான்" என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.