ETV Bharat / state

நவம்பர் 1ல் லியோ வெற்றி விழா? நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திட்டம்? அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் போலீசில் மனு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 8:23 PM IST

Leo Movie success celebration: லியோ திரைப்பட வெற்றி கொண்டாட்டத்துக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் காவல் துறையினரிடம் மனு கொடுக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Etv Bharat
லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கு கொண்டாட்டம்? தயாரிப்பு நிறுவனம் மனு அளித்துள்ளதாக தகவல்...

சென்னை: லியோ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை நவம்பர் 1ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கொண்டாட அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் காவல் துறையினரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 19ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் அதுவே படத்திற்கு தனி ஹைப்பை உருவாக்கியது. இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரிலீஸ் வரை ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தது. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான history of violence என்கிற ஆங்கில படத்தின் தழுவலான லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய், பார்த்திபன் என்கிற கதாபாத்திரத்தில் பேக்கரி தொழில் செய்பவராக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு லோகேஷ் உடன் இணைந்து ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. ரசிகர்கள் இடையில் கலவையான விமர்சனங்களை லியோ திரைப்படம் பெற்று வந்தாலும் படத்தின் வசூல் நாளாக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒருபக்கம் லியோவால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என விமர்சிக்கப்பட்டாலும், படக்குழு தரப்பில் லியோ வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நவம்பர் 1ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்பட வெற்றி கொண்டாட்டத்துக்கு அனுமதி கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் படத்தின் தயாரிப்புக் குழு தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் மணிகண்டன் என்பவர் பெரிய மேடு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்பதால் ரசிகர்கள் பெறும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், லியோ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி மற்றும் வசூல் சாதனை செய்ததைத் தொடர்ந்து படத்தின் வெற்றி விழாவை வரும் நவம்பர் 1 ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அனுமதி கேட்டு போலீசில் மனு அளித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நாயகன் மீண்டும் வரார்.. இந்தியன் 2 முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.