ETV Bharat / state

கோவிட் - 19 அச்சுறுத்தல் மத்தியிலும் சி.ஏ.ஏ.வை எதிர்த்து நூதன போராட்டம்

author img

By

Published : Mar 21, 2020, 1:42 PM IST

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பினை மக்கள் அனைவரும் தெரிவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Fight against the CAA in a new way despite threat of the Covit 19
கோவிட் - 19 அச்சுறுத்தல் மத்தியிலும் சிஏஏவை எதிர்த்து நூதன வழியில் போராட்டம்!

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவிவருவதால் அனைத்துப் போராட்டங்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகப் போராட்டக் குழுக்களால் அறிவித்ததையடுத்து ஓய்ந்தன.

இந்நிலையில், சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராகக் கறுப்பு பேட்ஜ் அணியும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தங்கள் உடைகளில் கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

கோவிட் - 19 அச்சுறுத்தல் மத்தியிலும் சிஏஏவை எதிர்த்து நூதன வழியில் போராட்டம்!
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவர் முஸ்தபா, "குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவந்த போராட்டத்தை நிறுத்திவைத்துள்ளோம்.
இருப்பினும் இது தொடர்பாக எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சட்டையில் கறுப்பு பேட்ஜ், வீடு, கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றி எங்கள் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறோம். இதனை நாடு முழுவதும் இருக்கும் மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஒரு நல்ல நடிகர், மத்திய அரசை எதிர்த்து இச்சட்டத்துக்கு தீர்மானம் நிறைவேற்றினால் இங்கு நடைபெற்றுவரும் அதிமுக அரசை, மத்திய அரசு செல்லாக்காசாக ஆக்கிவிடுமோ என்று அச்சப்படுகின்றனர். இதன் காரணமாகவே சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாமல் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அவரது தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றிவருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கரோனா: ஊடகவியலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிய ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.