ETV Bharat / state

பொறியியல் படிப்பு பருவத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

author img

By

Published : Jun 8, 2022, 3:47 PM IST

பொறியியல் படிப்பு பருவத்தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளில் பருவத்தேர்வில் மாணவர்களுக்கு வரும் 18ஆம் தேதி செய்முறைத் தேர்வுகளும், 28ஆம் தேதி செமஸ்டர் எழுத்துத் தேர்வும் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எம்.இ, எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளில் பயிலும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் செப்டம்பர் 5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எம்ஆர்க் பயிலும் மாணவர்களுக்கான 2,4ஆம் செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 18ஆம் தொடங்கும் என்றும், ஒருங்கிணைந்த எம்.ஆர்க், எம்.எஸ்சி, எம்பிஏ படிப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஆகஸ்ட் 4, 5ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: விமான போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு.. விவரம் உள்ளே...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.