ETV Bharat / state

பந்தயத்தில் சீறப்போகும் எலக்ட்ரிக் கார்கள்.. ஐஐடி மாணவர்கள் அசத்தல்..

author img

By

Published : Nov 28, 2022, 5:02 PM IST

சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் குழு மின்சாரத்தால் இயங்ககூடிய பந்தயக் காரை வடிவமைத்துள்ளனர்.

Etv Bharatஎலக்ட்ரிக் பந்தய கார் - சென்னை ஐஐடியின் நவீன கண்டுபிடிப்பு
Etv Bharatஎலக்ட்ரிக் பந்தய கார் - சென்னை ஐஐடியின் நவீன கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை ஐஐடியை சேர்ந்த ராஃப்தார் குழுவினர் மின்சாரத்தால் இயங்கும் பார்முலா ரேசிங் பந்தயக்காரை வடிவமைத்துள்ளனர். இந்த காருக்கு RF 23 என பெயரிடப்பட்டுள்ளது "ஸ்டூடண்ட் பார்முலா 1 பந்தையங்களில்" இந்த கார் பயன்படுத்தப்பட உள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டில் டிரைவர் இல்லா கார் கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லித்தியம் அயன் பேட்டரியால் பந்தயக்காருக்கான பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த காரினை அரை மணி நேரம் வரை இயக்க முடியும். 0-100 secs 4 நொடிகளில் எட்டக்கூடிய வகையிலும் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வேகத்திலும் இந்தக் காரை இயக்க முடியும். எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் ஏற்ப்படும் பிரச்சனைகளால் வாகனங்கள் அடிக்கடி தற்போது அடிக்கடி தீப்பற்றி ஏறிகின்றன.

இதனை தடுக்கும் வகையில் thermal management system மற்றும் பேட்டரி கூலிங் தொழில்நுட்பம் ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் பேட்டரியால் தீ விபத்து ஏற்ப்படுவதை தடுக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

RFR 23 ஐ அறிமுகப்படுத்திய பின்னர் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, ‘நிலைத்த போக்குவரத்தை நோக்கி உலகளவிலான போக்கு இருப்பதால், தற்போது உள்ள கார்களை மின்சார (combustion to electric) வாகனங்களாக விரைந்து மாற்றம் செய்யப்பட வேண்டி உள்ளது. உலகளவில் மின்சார வாகனத் தொழில் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், இதன் வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் மிகப் பெரிய சாத்தியக் கூறுகள் உள்ளன.

சென்னை ஐஐடியில் படிக்கும் 45 மாணவர்கள் இணைந்து 2020 கரோனா காலக்கட்டத்தில் இருந்து இதனை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே பந்தயக் களத்தில் ஜனவரி-2023ல் நடைபெறும் 'ஃபார்முலா பாரத்' நிகழ்வில் இந்தக் குழு பங்கேற்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2023ல் நடைபெறவிருக்கும் 'ஃபார்முலா ஸ்டூடண்ட் ஜெர்மனி'க்கு இந்தக் காரை கொண்டு செல்ல உள்ளனர். வரும் காலங்களில் ஓட்டுநர் இல்லாத கார்கள், போக்குவரத்து சாதனங்களை இணைக்கும் தொழில்நுட்பம் போன்ற எதிர்காலக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தளமாக ரஃப்தார் விரைவில் அமையும்.

இந்த ஆண்டு பார்முலா பாரத் விர்ச்சுவல்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கும் வரும் காலத்தில் காரை டிரைவர் இல்லாமல் ஒட்டுவதற்கு ஏற்பவும் தயார் செய்ய உள்ளனர். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, உலகளாவிய அணுகும் தன்மை, வசதி, செயல்திறன், குறைக்கப்பட்ட செலவு ஆகியவற்றை இக்கருத்து உறுதி செய்கிறது. 2025ல் ஓட்டுநர் இல்லாத பந்தயக் காரை (Driverless race car) பயன்பாட்டிற்கு வரும். மேலும் சென்னை ஐஐடியில் தயாரிக்கப்பட்ட மைக்ரோபுராசசர் சக்தி பயன்படுத்தப்பட உள்ளது.

வெளியில் இருந்து வாங்கினால் அதனை பயன்படுத்துவதற்கான கோடிங் எழுத வேண்டும். சென்னை ஐஐடியில் தயாரிக்கப்பட்டால், அவர்களுக்கு ஏற்ப கோடிங் எழுத முடியும். 10க்கு மேற்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் கண்டுபிடிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். பந்தயக்காரை உருவாக்கி விட்டால், அதில் இருந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிற கார்களை வடிவமைப்பது எளிதாக இருக்கும்.

லித்தியத்தால் ஆன பேட்டரிகளுக்கு மாற்றாக ஜிங்க் பேட்டரி வடிவமைப்பில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருள்களை தவிர்த்து பயோ எத்தனால் பயன்பாட்டினை ஒரே வாகனத்தில் பயனடுத்துவதற்கான ஆராய்சி பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

எலக்டிரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் தற்பொழுதைய காலகட்டத்தில் அவை பந்தயகாரிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடிய அளவில் புதுமையான மாற்றங்கள் நிகழ்வது எரிபொருள் களின் விலை நாளுக்கு நாள்உயர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் எதிர்கால மாற்று எலக்ட்ரிக் வாகனங்களே என்பதை மெய்பிப்பதாக உள்ளது.

எலக்ட்ரிக் பந்தய கார் - சென்னை ஐஐடியின் நவீன கண்டுபிடிப்பு

இதையும் படிங்க:'வானவில் மன்றம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.