ETV Bharat / state

மழை நின்று 2 நாட்களாகியும் வடியாத வெள்ள நீர்.. அவல நிலையில் உள்ள அரும்பாக்கத்தின் கழுகுப்பார்வை காட்சிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 12:32 PM IST

Michaung cyclone affected at chennai: மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளம் சாலைகளில் நிரம்பியிருந்த நிலையில், மழை நின்று 2 நாட்களுக்கு மேலாகியும் அரும்பாக்கம் பகுதியில் நீர் வடியாமல் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.

அரும்பாக்கம் ஒரு கழுகு பார்வை
மழை நின்று 2 நாட்களாகியும் வடியாத நீர்

மழை நின்று 2 நாட்களாகியும் வடியாத நீர்

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியதை அடுத்து, சென்னையில் 2 நாளாக மழை கடுமையாக இருந்தது. இந்த மழையால் பல ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்ததில், நகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த திடீர் வெள்ளத்தால் கீழ்தளத்தில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், வீட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவானது.

இந்நிலையில் மழை நின்று இரண்டு நாட்களாகியும், பல பகுதிகளில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் இருந்து வருகிறது. விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர், வடபழனி, ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: “டி.டி.சி அப்ரூவல் என்று சொல்லி ஏமாற்றி விட்டார்கள்” வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் குமறும் மக்கள்!

குறிப்பாக அரும்பாக்கம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் 3வது நாளாக இன்றும் மழை நீரானது வெளியேறாமல் உள்ளது. தொடர்ந்து தேங்கியுள்ள மழை நீரால், அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் தேங்கியுள்ள வெள்ள நீர், கழுகுப் பார்வை மூலம் பார்க்கும்போது குளம் போல காட்சியளிக்கிறது . நிலைமை சீராகி வருவதாக கூறப்பட்டாலும், விரைந்து இதனை சரி செய்து நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும் என்பதே அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: புயலுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் சென்னை.. மீட்புப் பணிகள் தீவிரம் - தற்போதைய நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.