ETV Bharat / state

மக்களவை தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது? திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வழக்கு!..

author img

By

Published : Mar 31, 2022, 6:38 AM IST

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11.48 கோடிக்கு வரி வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து திமுக எம்.பி. கதிர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருடன் தொடர்புடையவர்களான தாமோதரன், விமலா ஆகியோர் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, விமலாவின் வீட்டில் 11 கோடியே 48 லட்ச ரூபாயை கைப்பற்றிய நிலையில், அந்த பணம் தன்னுடையது என அவரது சகோதரர் சீனிவாசன் உரிமை கோரினார்.

வருமான வரித்துறை நோட்டீஸ்: ஆனால், அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என ஏன் அறிவிக்கக்கூடாது என்று விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கதிர் ஆனந்த் விளக்கம் அளித்த பின்னரும், அதை நிராகரித்துவிட்டு, அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என அறிவித்ததுடன், அதற்கான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த், தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சி.சரவணன், வருமான வரித்துறை திரட்டிய ஆதாரங்கள் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிராக இருப்பதாக கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனு நீதிபதிகள் மகாதேவன், நீதிபதி சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வந்தது.

பணம் யாருடையது: அப்போது, கதிர் ஆனந்த் தரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் உரிமையாளருக்கும், தனக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கமளித்த பிறகும், நடவடிக்கை எடுப்பதாகவும், பணம் தன்னுடையது இல்லை என்று விளக்கத்தை ஏற்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை நாளை (மார்ச் 31) விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதலமைச்சரை சந்தித்த எஸ்.எஸ்.சிவசங்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.