ETV Bharat / state

'சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக ஓணம் திகழ்கிறது' - மு.க. ஸ்டாலின் வாழ்த்து

author img

By

Published : Aug 30, 2020, 2:58 PM IST

சென்னை : சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாக ஓணம் திருநாள் திகழ்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கேரள மக்களுக்கும், தமிழ்நாடு வாழ் கேரள மக்களுக்கு ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

dmk leader stalin wishes kerela people on onam
dmk leader stalin wishes kerela people on onam

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தமிழ்நாட்டில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். “ஓணம் திருநாள்” பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.

கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையின் அருமை பெருமைகள் பல உண்டு. அதில் குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, “அத்தப்பூ” கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது.

தீரமும், ஈரமும் மிகுந்த "மகாபலி" சக்ரவர்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வரவேற்கும் நாளாக துவங்கி, அடுத்தடுத்த நாட்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவுகள் பரிமாறுதல் போன்றவற்றைத் தாராளமாகப் பகிர்ந்துகொண்டு, தங்களுக்குள் உள்ள மேம்பட்ட உறவினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் விழா இது.

இளைஞர்கள் மத்தியில் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரிய படகுப்போட்டியைப் பத்து நாட்கள் நடத்தி, அந்த 10ஆவது நாளில் திருவோணம் என்ற எழுச்சிமிகு கொண்டாட்டத்துடன் ஓணம் திருவிழா இனிதாக நிறைவடைகிறது.

பேரன்புக்கும், கொடைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில் - திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும் - கேரள மக்கள் அனைவரும் - ஆரோக்கியமான வாழ்வும் – அனைத்து வளங்களும் பெற்று எந்நாளும் இன்புற்றிருக்க வேண்டும் என்று “ஓணம் திருநாள்” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க... மலையாள மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஓணம் வாழ்த்து!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.