ETV Bharat / state

கோயில் அர்ச்சகரை அடித்து உதைத்த திமுக பிரமுகர் - போலீஸ் வலைவீச்சு

author img

By

Published : Mar 1, 2020, 6:48 PM IST

former temple administrator attacked temple priest at chennai ayanavaram
former temple administrator attacked temple priest at chennai ayanavaram

சென்னை: கோயிலுக்குள் புகுந்து அர்ச்சகரை எட்டி உதைத்து கடுமையாகத் தாக்கிய, கோயிலின் பழைய நிர்வாகி, அவரது மகளுமான திமுக வழக்கறிஞர் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

சென்னை ஓட்டேரி முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் சென்னை அயனாவரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் அர்ச்சகராக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார்.

நேற்று முன்தினம் சுரேஷ் வழக்கம்போல் கோயிலில் பூஜை செய்துகொண்டிருந்தபோது கோயிலுக்குள் வந்த பழைய நிர்வாகிகளான திமுக கிழக்கு மாவட்ட வழக்கறிஞர்களின் அமைப்பாளர் தங்கராஜ் (55), அவரது மகள் வழக்கறிஞர் அபிநயா (22) உள்ளிட்ட ஐந்து பேர் வந்துள்ளனர். அப்போது அர்ச்சகர் சுரேஷை தங்கராஜும் அவரது மகளும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் விசாரணையில், தங்கராஜ் கோயில் நிர்வாக பொறுப்பிலிருந்து 2018ஆம் ஆண்டு நீக்கப்பட்டுள்ளார். அவர் நிர்வாக பொறுப்பில் இருக்கும்போது சுரேஷ் என்பவரை அர்ச்சராக பணியில் அமர்த்தியுள்ளார். பின்னர் தங்கராஜ் மீது நிர்வாக முறைகேட்டு புகார்கள் வந்ததையடுத்து அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதற்கு முன்பாகவே தங்கராஜ் அர்ச்சகர் பணியிலிருந்து சுரேஷை நீக்கியுள்ளார். அதன் பின்பு கோயில் நிர்வாகம் மீண்டும் சுரேஷை அர்ச்சகர் பணியில் சேர்த்துள்ளது. இதனால் சுரேஷ் மீது தங்கராஜுக்கு கோபம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பொதுவெளியில் ”நான் பணியில் இருக்கும்போது சேர்த்துவிட்ட பையன் நீ, மரியாதையாக நீயே கோயிலை விட்டு சென்றுவிடு' என சுரேஷை, தங்கராஜ் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

கோயில் அர்ச்சகரை தாக்கிய கோயில் நிர்வாகி

இந்நிலையில் கோயில் நிர்வாகியாக தங்கராஜ் இருந்தபோது, கோயிலுக்குப் போட்டுக்கொடுத்த இரும்புப் பந்தலைப் பிரிப்பதற்காக நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர், பணியாளர்களை அழைத்து கோயிலுக்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து இரும்புப் பந்தலை அவர்கள் பிரிக்க முயன்றபோது அங்குவந்த சுரேஷ், எதைச் செய்வதாய் இருந்தாலும் கோயில் நிர்வாகிகள் வந்த பின்பு செய்யுமாறு கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், சுரேஷை தாக்கியுள்ளார். இதையடுத்து தங்கராஜின் மகள் அபிநயா சுரேஷின் வயிற்றில் பலமாக உதைத்துள்ளார். இதில் அங்கேயே சுரேஷ் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் கோயில் நிர்வாகிகள் சுரேஷை மருத்துவமனையில் அனுமதித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து அயனாவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரம் சரணாலயங்களில் 20 விழுக்காடு பறவைகள் அதிகரிப்பு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.