ETV Bharat / state

அமெரிக்காவில் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? - கி. வீரமணி பதில்

author img

By

Published : Oct 16, 2019, 10:58 PM IST

சென்னை: அமெரிக்காவில் சாதி வந்துவிட்டது என்றால் நோய் வந்துவிட்டது என்றும் அதனைத் தீர்க்க பெரியாரும் அம்பேத்கரும் அவசியம் தேவைப்படுகிறார்கள் என்று திரவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.

k.veeramani

அமெரிக்காவில் மனிதநேய சாதனையாளர் விருது பெற்ற திரவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு பெரியார் திடலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கி. வீரமணி, "பெரியாரினுடைய கருத்துகள் பல்வேறு திசைகளில் பரப்பவும், அதற்கான தேவையும் ஏற்படுகிறது. பெரியாரின் கொள்கைகளை அமெரிக்காவிற்கும் கொண்டுசெல்ல வேண்டிய அவசிம் இருக்கிறது. இந்தியாவில்தான் சாதி இருக்கு என்று கூறுகிறார்கள். கடவுள் மறுப்பாளன், பார்ப்பன எதிர்ப்பாளர் என்று இரண்டு விஷயங்களுக்குள் அடைக்கலாம் என்று பார்க்கின்றனர்.

அமெரிக்காவிற்குப் பெரியார் தேவை

ஆனால் அவருடைய இலக்கு சமத்துவம், சுயமரியாதை, தன்மானம், எல்லோருக்கும் கல்வி, பெண் அடிமை நீக்கம், சமூக நீதி என இது அத்தனையும் எதிர்த்து ஐந்து துறைகளில் அவர் போராடினார்.

அமெரிக்காவிலும் சாதியை தேடும் தமிழனா?

இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் அமெரிக்காவில் நிறைய பேர் இருக்கின்றனர். நம்முடைய நல்ல தத்துவங்கள், பண்பாட்டு படையெடுப்புக்கு முன்னர் இருந்த நல்ல சுயமரியாதை தத்துவங்களை விட்டுவிட்டு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சாதியை தேடிக்கொண்டிருக்கின்றனர். அதுதான் வேடிக்கையாக உள்ளது. எனவேதான் அங்கிருப்பவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் உங்களுக்கு தேவைப்படுவதைவிட எங்களுக்கு தேவைப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் சாதியா? நூல் தமிழாக்கம்

அமெரிக்காவில் கறுப்பு இனம் என்கிற பாகுபாட்டை ஒழித்து இடஒதுக்கீடு சட்டம் இருக்கிறது. ஆனால், இங்கிருந்து போக்கக்கூடியவர்கள் சாதியைக் கொண்டுசெல்கின்றனர். அம்பேத்கருடைய அமைப்பு அமெரிக்காவில் சாதி (Caste in the United States) என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளனர். இது மிகப்பெரிய ஆய்வு நூல். இதை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 'அமெரிக்காவில் சாதியா' என்ற தலைப்பில் மொழிப்பெயர்க்க உள்ளது.

அமெரிக்காவில் சாதி வந்துவிட்டது என்றால் நோய் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். எனவே அதைத் தீர்க்க பெரியார் வேண்டும். அடுத்த மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெரியாரிய சிந்தனைகள் உலகளவில் மானிடம் பரவக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.

அதுதான் என்னுடைய பயணம். அது முழுக்க முழுக்க வெற்றிபெற்றுள்ளது. பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சிறப்பு" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Intro:Body:அமெரிக்காவில் மனிதநேய சாதனையாளர் விருது பெற்ற திரவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பெரியார் திடலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, "பெரியாரினுடைய கருத்துகள் பல்வேறு திசைகளில் பரப்பப்படுகிறது. தேவையும் படுகிறது. பெரியாரின் தேவை அங்க என்ன இருக்கு. இங்கேதானே சாதி இருக்கு என்று கூறுகிறார்கள். கடவுள் மறுப்பாளன், பார்ப்பன எதிர்பாளர் என்று இரண்டு விஷயங்களுக்குள் அடக்கலாம் என்று பார்க்கின்றனர். ஆனால் இவை இரண்டுமே அவரின் திட்டங்கள். இது ஒரு பகுதி. ஆனால் அவருடைய இலக்கு சமத்துவம், சுயமரியாதை, தன்மானம், எல்லோருக்கும் கல்வி, பெண் அடிமை நீக்கம், சமுகநீதி என இது அத்தனையும் எதிர்த்துஐநேது துறைகளில் அவர் போராடினார்.

இங்கிருந்து புலம் பெயர்ந்து சென்றவர்கள் அமெரிக்காவில் நிறைய பேர் இருக்கின்றனர். நம்முடைய நல்ல தத்துவங்கள், பன்பாட்டு படையெடுப்புக்கு முன்னர் இருந்த நல்ல சுயமரியாதை தத்துவங்களை விட்டுவிட்டு அங்கு போய் சாதி தேடிக்கொண்டு இருக்கின்றனர். அதுதான் வேடிக்கையாக உள்ளது. எனவே தான் அங்கிருப்பவர்கள் பெரியாரும், அம்பேத்கரும் உங்களுக்கு தேவைப்படுவதை விட எங்களுக்கு தேவைப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் கருப்பு இனம் என்கிற பாகுபாட்டை ஒழித்து இடஒதுக்கீடு சட்டம் இருக்கிறது. ஆனால் இங்கிருந்து போக்கக்கூடியவர்கள் சாதியை கொண்டுபோய் உள்ளனர். அம்பேத்கருடைய அமைப்பு அமெரிக்காவில் சாதி (Caste in the United States) என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளனர். இது மிகப்பெரிய ஆய்வு நூல். இதை பெரியார் மனியம்மை பல்கலைக்கழகம் அமெரிக்காவில் சாதியா என்ற தலைப்பில் மொழிப்பெயர்க்க உள்ளது. அமெரிக்காவில் சாதி வந்துவிட்டது என்றால் நோய் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். எனவே அதை தீர்க்க பெரியார் வேண்டும்.

அடுத்த மாநாடு தென்னாப்பிராக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெரியாரிய சிந்தனைகள் உலகளவில் மானிடம் பரயக்கூடிய அளவுக்கு வளர்நேதிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு கூறி கொள்கிறேன். அதுதான் என்னுடைய பயணம். அது முழுக்க முழுக்க வெற்றி பெற்றுள்ளது. பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சிறப்பு.

ராஜிவ் காதி படுகொலை குறித்து பேசியிருயவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தளவுக்கு தொடர்புள்ளது என்று கேட்டால் இது சொல்ல வேண்டிய அவசியமில்லை. தங்களை உமர்த்திக்கொண்டு பெரியளவில் வரவேண்டும் என்தற்கான தேவையற்ற ஒரு செயல்தான். அவரை நாங்கள்தான் கொன்றோம் என்று சொல்லவில்லையே. ராஜாவை மிஞ்சிய ராஜா விசுவாசி ஏன் இருக்கிறார்கள். ஏனென்றால் உண்மையான விடுதலைப் புலிகளிடம் பழகியவர்கள் அல்ல. ஏதோ படம் எடுத்துக்கொண்டு அரசியல் நடத்தக்கூடியவர்கள். ராஜிவ் படுகொலைக்கும் எங்களுக்கும் சம்பதமில்லை நாங்கள் குற்றமற்றவர்கள் என்று போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது எந்தளவுக்கு அவர்கள் விடுதலையாக கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

ஆகவே இதுபோன்று தேவையில்லாத பேச்சுகளை கூறி தலைவராகிவிட வேண்டும் என்று அவர் செயல்படக்கூடாது. தமிழ்நட்டில் யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம். ஆனால் இதுமாதிரி குறுக்கு வழியில் இந்த மாதிரி தலைமை தேவையில்ல. ஈழ தமிழர்களின் வாழ்வு மலர வேண்டும். உண்மைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.

குஜராத்தில் தேர்வு ஒன்றில் காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. வரலாற்று திராபுவாதிகள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள். எனவே காந்தி வந்து அவதாரமாக இருந்தார் அவரை கடவுள் அழைத்துக்கொண்டு போனார் என்றும் சொல்வார்கள்.

சாவக்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறார். தோண்டி தோண்டி 100 வருடம் முன்பு இறந்தவர்களுக்கெல்லாம் கொடுத்து வருகின்றனர். அவர்கள் கையிலிருக்கிறது அதனால் பாரத ரத்னா எவ்வளவு மரியாதை இழந்திருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம்" என்று தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.