ETV Bharat / state

அம்மா, கூட்டுறவு மருந்தகங்களில் ரூ.93.09 கோடிக்கு வர்த்தகம்; கூட்டுறவு சங்க பதிவாளர் பதில்!

author img

By

Published : Nov 21, 2021, 9:40 AM IST

அம்மா மருந்தகங்களை மூடவில்லை, மாறாக அவற்றுடன் கூட்டுறவு மருந்தகங்களையும் சேர்த்து இந்த ஆண்டு ரூ.93.09 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.

'அம்மா, கூட்டுறவு மருந்தகங்களில் ரூ.93.09 கோடிக்கு வர்த்தகம்'; கூட்டுறவு சங்க பதிவாளர் பதில்!
'அம்மா, கூட்டுறவு மருந்தகங்களில் ரூ.93.09 கோடிக்கு வர்த்தகம்'; கூட்டுறவு சங்க பதிவாளர் பதில்!

சென்னை: அம்மா மருந்தகங்கள் மூடப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்களில், இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை ரூ.93.09 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என கூட்டுறவு சங்க பதிவாளர் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசானது கூட்டுறவு சங்கங்களின் மூலம் 131 அம்மா மருந்தகங்கள், 174 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 305 மருந்தகங்களை நடத்துகிறது. இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே இயங்கி வந்த அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. மாறாக, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

300 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்

கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கையானது 126லிருந்து, 131ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் மருந்தகங்கள் அனைத்தும் 20 விழுக்காடுவரை தள்ளுபடி விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்கின்றன. இதனால் ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பயன் பெறுகின்றனர் என்பதனை அரசு நன்கு உணர்ந்துள்ளது.

அவ்வாறு உணர்ந்ததனாலேயே அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும் ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள் எனும் அடிப்படையில் உயர்த்தப்படவுள்ளது.

அதன்படியே கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அடுத்த 5 ஆண்டுகளில், 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை தொடங்க முதலமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடப்பு ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 60 எனும் எண்ணிக்கையைவிட, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கூடுதலாக 75 மருந்தகங்கள் தொடங்க கீழ்கண்டவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதுக்கோட்டை - 2

திண்டுக்கல் -2

சென்னை - 4

ஈரோடு - 2

மதுரை - 2

தேனி - 2

திருநெல்வேலி - 2

திருவள்ளூர் - 2

வேலூர் - 2

இராணிப்பேட்டை - 2

செங்கல்பட்டு - 2

இராமநாதபுரம் - 2

திருச்சி - 2

காஞ்சிபுரம் - 2

விருதுநகர் - 2

தஞ்சாவூர் - 2

கன்னியாகுமரி - 2

மயிலாடுதுறை - 2

பெரம்பலூர் - 2

சிவகங்கை - 2

அரியலூர் - 2

கடலூர் - 2

தர்மபுரி - 1

கிருஷ்ணகிரி - 2

நாகப்பட்டினம் - 2

நாமக்கல் - 1

சேலம் - 2

திருப்பூர் - 2

திருவண்ணாமலை - 2

விழுப்புரம் - 2

கள்ளக்குறிச்சி - 2

திருவாரூர் - 2

தூத்துக்குடி - 2

தென்காசி - 2

திருப்பத்தூர் - 2

கோவை - 2

கரூர் - 2

நீலகிரி - 1

மொத்தம் - 75

நடப்பு ஆண்டில் 31.10.2021 வரை, 131 அம்மா மருந்தகங்கள் மூலம் ரூ.44.88 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது. அதேபோல 174 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.48.21 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டில் 31.10.2021 வரை, மொத்தமாக 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலமாக ரூ.93.09 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Pocso act: திண்டுக்கல் தனியார் கல்லூரிக்கு சீல் வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.