ETV Bharat / state

ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் சென்னையில் வி.பி.சிங் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 12:21 PM IST

vp singh statue in chennai: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழு உருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

CM Stalin unveils former Prime Minister VP Singh statue in Chennai Presidency College campus
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலை திறப்பு

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகச் சென்னை மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அவரது முழு உருவச் சிலை அமைத்திட பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (நவ.27) காலை 11 மணிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையைத் திறந்து வைத்தார்.

மாவீரர்கள் நாள்: தமிழீழத்தில் மக்களுக்காகப் போராடி இன்னுயிர் ஈத்த வீரர்களை நினைவு கூறும் தினமாக நவம்பர் 27 மாவீரர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக மண்டல கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியது, தமிழகத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த காவிரி நீர் விவகாரத்தில் காவிரி நடுவன் மன்றம் அமைத்தது போன்ற பல முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்ததாலேயே வி.பி.சிங் சமூக நீதி காவலராக பார்க்கப்படுகிறார்.

இதையும் படிங்க: "விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஒரே அரசு திமுக தான்" - தஞ்சையில் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு

அவருடைய நினைவைப் போற்றும் விதமாக வி.பி.சிங்கிற்கு தமிழீழ மாவீரர்கள் தினத்தன்று சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மாநில கல்லூரி வளாகத்தில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்காக வி.பி.சிங் ஆற்றிய பணிகளை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அவரது சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், வி.பி.சிங் மனைவி சீதா குமாரி, அவருடைய மகன்கள் அஜயா சிங், அபய் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.மேலும், இந்நிகழ்வில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "ஆவின் பால் விவகாரத்தில் அரசு திணறல்; அமைச்சருக்கே சிறையில் சரியான உணவு இல்லை" - தமிழக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.